தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிய திட்டங்கள் இல்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

18 Jun 2026, 10:38 pm
புதிய திட்டங்கள் இல்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

புதிய திட்டங்கள் இல்லை; மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஜூன் 18- மாற்றங்க ளைக் கொண்டு வருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசின் ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்குப் புதிய திட்டங்களோ, கொள்கை அறிவிப்புகளோ எதுவும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்பு அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை யில் என்னென்ன விவரங்கள் இருந்த னவோ, அவை மட்டும்தான் இந்த உரையிலும் இடம்பெற்றுள்ளன. புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத தால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது” என்றார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்றும், போதைப் பொருள் விற்பனை முன்பைவிடப் பலமடங்கு அதிகமாகி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். புதிய ஆட்சி அமைந்து வெறும் 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகளும், 126 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளும் பதிவாகி இருப்பதாகத் தரவுகளைச் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைபெறுவதாகவும், தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கத் தற்போதைய அரசு தவறிவிட்டது என்றும் சாடினார்.

மகன் மிதுன் அரசியல் வருகை குறித்து விளக்கம்: தனது மகன் மிதுன் அரசியலுக்கு வரப்போவதாகப் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகளைக் கண்டித்த எடப்பாடி பழனிசாமி, “எனது மகன் மிதுன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை இந்த நேரத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, ஊடகங்கள் இனிமேல் இத்தகைய அவதூறான செய்திகளை வெளியிட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.