எடப்பாடி பழனிசாமி-சி.வி.சண்முகம் தரப்பினர் இடையே மோதல்
11 Jul 2026, 9:41 pm
<p><strong>எடப்பாடி பழனிசாமி-சி.வி.சண்முகம் தரப்பினர் இடையே மோதல்</strong></p><p>செஞ்சி, ஜூலை 11 - சட்டசபைத் தேர்தலுக்குப் பின் அதிமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில், கட்சியில் உள்ள சில தலைவர்கள் தலை வர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வல்லம் பகுதியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத் தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பசுபதி நடத்திய இந்நிர்வாகிகள் கூட்டத்தை, நடத்தக் கூடாது என்றும், உள்ளூர் சட்டமன்ற உறுப் பினரை ஏன் அழைக்கவில்லை என்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து, ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. உடனடி யாக காவல் துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p>
