தீக்கதிர் முக்கிய செய்திகள்
9 May 2026, 11:16 pm

ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது 120 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் 41 சட்டமன்ற உறுப்பி னர்களுடன் ஆலோசனை நடத்தினார். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட ஆறு பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நடை பெற்று முடிந்த 17 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எம்எல்ஏ காமராஜை கடத்தினோமா? தவெக விளக்கம்

சென்னை: மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ காமராஜை காண வில்லை எனவும், அவரைக் கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் முயற்சிக்கிறது எனவும் அமமுக பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, ஒரு வீடியோவை வெளியிட்டு தவெக தரப்பு பதிலடி கொடுத் துள்ளது. அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு தெரி விக்கும் கடிதத்தில் கையெழுத்திடும் காட்சிகள் அந்த வீடி யோவில் இடம்பெற்றன. அவர் தனது சுயநினைவுடனும் மகிழ்ச்சியுடனும் ஆதரவு கடிதம் எழுதினார் என்றும், தின கரன் தெரிவிப்பது தவறான தகவல் என்றும் தவெக தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நள்ளிரவில் ஆளுநரிடம் புகார் அளித்த தினகரன், “குதிரை பேரம் நடந்திருக்க வேண்டும். எம்எல்ஏ காணாமல் போனதற்கு தவெகதான் காரணம். போலியான கடிதம் மூலம் ஆளுநரையே ஏமாற்றத் துணிந்துவிட்டார் விஜய்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார். சில மணி நேரங்களில் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்த காமராஜ், “நான் தவெகவிற்கு ஆதரவு அளிக்க வில்லை. என் பெயரில் போலிக் கடிதம் வெளியாகி யுள்ளது. எனக்கு வாட்ஸ்அப் வசதி இல்லாத சாதாரண போன் மட்டுமே உள்ளது; வாட்ஸ்அப் வழி கடிதம் அனுப்பி யதாக கூறுவது பொய்யானது” என்று மறுப்பு தெரிவித்தார். சனிக்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “வீடியோவில் கையெழுத்திடுவது காமராஜ் அல்ல, அது செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட வீடியோவாகவும் இருக்கலாம். ஒரிஜினல் கடிதத்தை தவெக வெளியிட வேண்டும். போலி கடிதத்தின் பின்னணி யில் விஜய்தான் உள்ளார்” என்று மீண்டும் குற்றம் சாட்டி னார். தவெகவினர் மீது கிண்டி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னை-குமரி கோடைக்கால சிறப்பு ரயில்

சென்னை: கோடைக்கால பயணிகளின் கூட்ட நெரி சலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர்-கன்னியா குமரி இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்துள்ளது. வண்டி எண்.06045 - சென்னை எழும்பூரில் இருந்து மே 15, 22, 29 மற்றும் ஜூன் 5 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியா குமரி வந்தடையும். திரும்பும் பயணமாக வண்டி எண். 06046 - மே 17, 24, 31 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மரு வத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, விருது நகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் நிறுத்தப் படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு மே 10 காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

கப்பல் பழுது: பயணிகள் மீட்பு

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதாகி நின்ற நிலையில் சுமார் 7 மணி நேரமாக உணவின்றி தவித்த 141 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நடுக்கடலில் கப்பல் பழுதானதால் உணவு, குடிநீரின்றி தவித்த 141 பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மீனவர்கள் மீட்புப் படகுகள் மூலம் பயணிகள் கப்பலை துறைமுகத் துக்கு இழுத்து வந்தனர். மீட்கப்பட்ட 141 பயணிகளுக் கும் நாகை துறைமுகத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரூ.80 லட்சம் பண மோசடி புகார் தவெக எம்எல்ஏ-விடம் போலீஸ் விசாரணை

திருச்சி, மே 9 - கட்டிட விரிவாக்க பணிகளுக்காக ஒப்பந்தகாரருக்கு வழங்கிய ரூ.80 லட்சம் மோசடி செய்யப் பட்டதாக திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் முசிறி தொகுதியில் தவெக சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்ட எம்எல்ஏ என்று தெரிய வந்துள்ளது. புகாரளித்த லட்சுமி என்பவர் கூறுகையில், “கடந்த 2025 ஆம் ஆண்டு லால்குடியைச் சேர்ந்த சிவில் இன்ஜி னியர் விக்னேஷ் மற்றும் அவரது மனைவி சிவரஞ்சனி ஆகியோருடன் கட்டிட பணிகளுக்கான ஒப்பந் தம் செய்யப்பட்டது. வழங்கப்பட்ட ரூ.80 லட்சத்தை பெற்றுக் கொண்ட விக்னேஷ், ஒப்பந்தப்படி பணி களை முடிக்காமல் பாதியிலேயே கை விட்டு விட்டார். மீத முள்ள பணத்தைத் திரும்பக் கோரிய போது மறுக்கப்பட்ட தாகவும், தற்போது அவர் எம்எல்ஏ பதவி யில் இருப்பதால் நியா யம் கிடைக்குமா என்ற அச்சம் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இந்த புகாரில் விசாரணை நடத்த உத்தரவிட்ட தையடுத்து கே.கே.நகர் போலீசார் விக்னேஷ் மற்றும் அவரது மனைவி மீது தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்ற னர். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவர் மீது எழுந்துள்ள மோசடி புகார் அர சியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தை கிளப்பியுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம், மே 9- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 392 கன அடியில் இருந்து 417 கன அடி யாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. நீர்மட்டம் 79.55 அடி யாக சரிந்தது.