கை,கால் வலிப்பு நோயால் நாட்டில் 1.5 கோடி பேர் பதிப்பு
20 Aug 2026, 12:53 am

கை,கால் வலிப்பு நோயால் நாட்டில் 1.5 கோடி பேர் பதிப்பு

சென்னை,ஆக.19-இந்தியாவில் சுமார் 1.2 முதல் 1.5 கோடி மக்கள் ‘பிட்ஸ்’ அல்லது கால் கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தாலும், 20 முதல் 30 விழுக்காடு பேருக்கு இதன் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் சுமார் 13 முதல் 15 லட்சம் பேருக்கு அறுவைசிகிச்சை தேவைப்படலாம் என மதிப்பிடப்பட்டாலும், விழிப்புணர்வு குறைபாடு மற்றும் தகுதியான நோயாளிகளைச் சரியாக அடையாளம் காணாததால், இந்தியாவில் ஆண்டுதோறும் 1,500-க்கும் குறைவான அறுவைசிகிச்சைகளே செய்யப்படுகின்றன.

இந்த பெரும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், சென்னை காவேரி மருத்துவமனைகள் குழுமம் தனது மூன்று கிளை களிலும் ஒருங்கிணைந்த மண்டல வலிப்பு நோய் சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது.

இந்த மையத்தில் நரம்பியல், மூளை-கதிர்வீச்சியல், நரம்பு-மின்னியல், மருத்துவ உளவியல் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் அடங்கிய பல்துறை மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். மூன்று கிளைகளின் மருத்துவக் குழுவினரும் 15 நாட்களுக்கு ஒருமுறை காணொலி வாயிலாக ஒன்றுகூடி நோயாளிகளின் பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிப்பார்கள் என்று மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர் கூறினார்.

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத தீவிர பாதிப்பு கொண்ட நோயாளிகள், ரேடியல் சாலையில் உள்ள மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அறுவைசிகிச்சை உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பின்தொடர் சிகிச்சைக்காக அவர்கள் மீண்டும் வீட்டிற்கு அருகிலுள்ள கிளைக்கே மாற்றப்படுவார்கள். சரியாகத் தேர்வு செய்யப்பட்டு செய்யப்படும் இத்தகைய அறுவைசிகிச்சைகள் மூலம் 75 சதவீதம் நோயாளிகளுக்கு வலிப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.