தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூரில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சொந்த கட்டிடத்தில் செயல்பட திட்டம்

4 Nov 2026, 12:35 am
திருப்பூரில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சொந்த கட்டிடத்தில் செயல்பட திட்டம்

திருப்பூரில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சொந்த கட்டிடத்தில் செயல்பட திட்டம்

திருப்பூர், நவ.3 -திருப்பூரில் இயங்கி வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மண்டல அலுவலகம் விரைவில் அரசு மற்றும் சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று இபிஎப்ஓ திருப்பூர் மண்டல ஆணையர் அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.

ஏவிபி கல்லூரி அரங்கில் செவ்வாயான்று நடைபெற்ற இபிஎப்ஓ அமைப்பின் 74ஆவது நிறுவன நாள் விழாவில் பேசிய அவர், திருப்பூரில் 11 ஆயிரம் பதிவு பெற்ற நிறுவனங்களும், 5 லட்சம் தொழிலாளர் சந்தாதாரர்களும், 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் உள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக கோவை செல்ல வேண்டியிருந்த நிலையில், தற்போது திருப்பூரிலேயே அனைத்துசேவைகளும் அவரவர் மொழிகளில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பேசுகையில், ”பிஎப் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும்.ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பென்ஷன் வழங்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றார். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ ச.பாலமுருகன் விழாவில் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், சிறந்த பிஎப் நிறுவனத்திற்கான கேடயம் ’ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்திற்கும், சிறந்த

தொழிலாளர் விருது ரவி என்பவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், ஓய்வூதிய ஆணைகள், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி பரிசுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கான பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தினர், ஓய்வூதியர்கள் மற்றும் பிஎப் அலுவலகப் பணியாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் பங்கேற்காததால் முணுமுணுப்பு!

இபிஎப்ஓ நிறுவன நாள் விழாவின் அழைப்பிதழில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.எஸ்.அருண்ராஜ், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி ஆகியோர் பங்கேற்பார்கள் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் நிகழ்ச்சி சற்று தாமதமாக தொடங்கியது.

முதலமைச்சரின் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அமைச்சர்களால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை என இபிஎப்ஓ சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஈரோட்டில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி முடிவடைந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனிடையே, அமைச்சர் அருண்ராஜ் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஒன்றிய அரசின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்பான இபிஎப்ஓ-வின் முக்கிய விழாவைப் புறக்கணித்துவிட்டு, தனியார்மருத்துவமனை நிகழ்ச்சிக்கு அமைச்சர் முன்னுரிமை அளித்த சம்பவம் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பாளர்களிடையே சலசலப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தியது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.