இபிஎப் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
19 May 2026, 12:49 am
<p><strong>இபிஎப் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, மே 18- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ9,000 அகவிலைப்படியு டன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் இபிஎப் ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தி னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்யத பென்சன் மற்றும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பறிக்கப்பட்ட கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று கோவை இபிஎப் மண்டல அலுவலகம் முன்பு கோவை இபிஎப் ஓய் வூதியர்கள் நலச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்க மாவட்டத் தலைவர் பி.என். பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா ளர் கே.குமாரசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் என். செல்லத்துரை துவக்கவுரையாற்றினார். அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ.ஆர். துரைசாமி கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொரு ளாளர் எஸ்.ஆர். மணி நன்றி கூறினார். இதில், ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பிஎஃப் மண்டல கமிஷனரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.</p>
