முந்தய பக்கம்

இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்

17 Jun 2026, 12:18 am
இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூன் 16- குறைந்தபட்ச பென்சன் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இபிஎப் பென்சனர் சங்கத்தினர் கோவையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இ.பி.எப் மண்டல அலுவலகம் முன்பு இ.பி.எப் பென்சனர்கள் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பி.என்.பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றார். இதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி உள்ள அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. ஆர்ப்பாட் டத்தில், அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ.ஆர்.துரை சாமி கோரிக்கைவுரையாற்றினார். சங்க மாவட்டச் செயலா ளர் கே.குமாரசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடி வில், சங்க பொருளாளர் மணி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram