முந்தய பக்கம்

இபிஎப் ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு: வரவேற்புக்குழு தேர்வு!

17 May 2026, 11:08 pm
இபிஎப் ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு: வரவேற்புக்குழு தேர்வு!
<p><strong>இபிஎப் ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு: வரவேற்புக்குழு தேர்வு!</strong></p><p>கோவை, மே 17- கோவையில் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்க மாநில மாநாட்டிற்கான 108 பேர் கொண்ட வரவேற்புக்குழு தேர்வு செய்யப்பட்டது. இபிஎப் ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில மாநாடு வரும் ஜூலை 26 ஆம் தேதியன்று கோவை, கவுண்டம்பாளை யம், டிவிஎஸ் நகர் சாலையிலுள்ள ஸ்ரீசுஹிதா ஹால் திருமண மண்டபத் தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக வரவேற்புக் குழு அமைப்புக்கூட்டம் கோவை, கண பதியில் உள்ள இன்ஜினியரிங் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என்.பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநி லத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செயலாளர் கா.ராமையன், அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஏ. ஆர்.துரைசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இன்ஜினி யரிங் சங்கத் தலைவர் எஸ்.பி.சுப்பிர மணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இக்கூட்டத்தில், மாநாட்டிற்கான வர வேற்புக்குழு தலைவராக பி.என்.பால கிருஷ்ணன், செயலாளராக ஏ.ஆர்.துரைசாமி, பொருளாளராக எஸ்.ஆர். மணி உட்பட 108 பேர் கொண்ட வரவேற் புக்குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram