இபிஎப் ஊழியர் சங்கத் தேர்தல் இரா.கிருபாகரன் 7-வது முறையாகப் பொதுச்செயலாளராக தேர்வு
14 Feb 2026, 4:33 pm
<p><strong>இபிஎப் ஊழியர் சங்கத் தேர்தல் இரா.கிருபாகரன் 7-வது முறையாகப் பொதுச்செயலாளராக தேர்வு</strong></p>
<p>சென்னை, பிப்.14- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஊழியர் சங்கத்தின் மாநில அளவிலான தேர்தல் வெள்ளியன்று நடை பெற்றது. இந்தத் தேர்தலில் ஊழியர் சம்மேளனத்தின் தற்போதைய பொதுச் செய லாளர் இரா. கிருபாகரன் மீண்டும் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 7-வது முறையாக பொதுச் செயலாளர் பொறுப் பேற்றுள்ளது. இத்தேர்தலில் மற்ற முக்கியப் பொறுப்பு களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சங்கத்தின் செயல் தலைவராக ஜெயக்குமார், இணைச் செயலாளராக பாலமுருகன் மற்றும் அமைப்புச் செய லாளராக ஏழுமலை ஆகி யோர் வெற்றி பெற்றுப் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், சென்னை கிளைக்கான நிர்வாகிகள் தேர்வில், கிளைச் செய லாளர் பதவிக்கு இரா. சந்தோஷ் ராஜ் , துணைத் தலைவர் பதவிக்கு ராஜராஜேஸ்வரி போட்டி யின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனை வருக்கும் சங்க உறுப்பி னர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>
