முந்தய பக்கம்

பதக்கம் வென்ற கடலூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

16 Jan 2026, 3:00 pm
பதக்கம் வென்ற கடலூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>பதக்கம் வென்ற கடலூர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு</strong></p> <p>கடலூர், ஜன.16 - டாம் அண்ட் டையூ நகரில் ஜனவரி 5ம் தேதி முதல் 10 &nbsp;வரை 2வது கேலோ இந்தியா பீச் &nbsp;பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தைச் சுதர்சன், மற்றொரு சுதர்சன், &nbsp;லோகேஸ்வரன், செல்வகுமார், போஸ் ராஜ குரு, &nbsp;ஸ்ரீகாந்த் ஆகிய 6 வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழகத்திற்கு 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளார்கள். கடலூர் மாவட்ட வீரர்கள் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு வியாழக்கிழமை வருகை தந்தனர். &nbsp;பென்காக் சிலாட் &nbsp;சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் இ.இளையராஜா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாவட்ட பயிற்சியாளர்கள், உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டு &nbsp;சிறப்பான வரவேற்பு அளித்தனர். வெற்றி பெற்ற வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram