சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு பழனியில் உற்சாக வரவேற்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>சிபிஎம் வேட்பாளர் என்.பாண்டிக்கு பழனியில் உற்சாக வரவேற்பு</strong></p><p>பழனி, ஏப்.9- திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.பாண்டி, வியாழன்று காலை பழனி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், பழனி தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் பாடுபடுவேன் என உறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
