முந்தய பக்கம்

தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு

11 Apr 2026, 5:30 am
தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு

தக்கலை பகுதியில் எழுச்சிமிகு வரவேற்பு

நாகர்கோவில், ஏப்.10- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரிக்கும் வாகன சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 10 வெள்ளியன்று தொடங்கினார்.

வேட்பாளருடன் இணைந்து கூட்டணி கட்சியினருடன் இணைந்து திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தக்கலை, குமாரகோவில், முளகுமூடு, புலியூர்க்குறிச்சி, வேர்க்கிளம்பி உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் பேசுகையில், பத்மநாபபுரம் தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவும், தொகுதி மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram