சவுக்கடி முதல் செங்கொடி வரை... தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி - கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
10 Oct 2026, 9:59 pm

சவுக்கடி முதல் செங்கொடி வரை...

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி - கே.பாலகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

ஒரு மனிதருக்கான விழா அல்ல,

ஒரு வரலாற்றுக்கான திருநாள்

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நூற்றாண்டு விழா ஒரு தனிமனிதருக்கான விழா அல்ல. பல நூற்றாண்டுகளாக முடிமன்னர்கள், அவர்களின் எடுபிடிகள், பண்ணையார்கள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் ராஜ்ஜியத்தில் கொடுஞ்சிறைகளுக்குள் வதைக்கப்பட்டு வந்த ஏழை உழைப்பாளிகள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைச் சாகுபடியாளர்கள், பண்ணையடிமைகள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரும் திருநாள் இது.

காலங்காலமாக, மனித சமூகத்தின் உயிர்மூச்சான உணவை உற்பத்தி செய்யும் நிலம் குவியல் குவியலாகச் சிலரின் கைகளில் குவிந்து கிடந்தது; மறுபக்கம், அந்த நிலத்தில் உழைத்த மக்கள் அவர்களின் அடிமைகளாக்கப்பட்டனர். இதுவே நீண்ட வரலாறாக இருந்தது.

பண்டைய காலம் தொட்டு, இந்த அநீதிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் அடக்குமுறைகளால் அடித்து நொறுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டன.

கடந்த நூற்றாண்டில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் இயக்கம், உள்நாட்டில் ஆதிக்கம் செலுத்திய பண்ணையார்களை எதிர்த்துப் போராட மறுத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே பெருநிலக்கிழார்களுக்கு ஆதரவாகவே அது செயல்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாமரம் வீசிய பண்ணையார்களும் நிலப்பிரபுக்களும், விடுதலைக்குப் பின் காங்கிரசோடு சேர்ந்து தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டனர். சற்றும் கூச்சமின்றி அவர்களை அரவணைத்து, அவர்களால் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட காங்கிரஸ், ஏற்கனவே சுரண்டப்பட்டுக்கொண்டிருந்த உழைப்பாளி மக்களை மேலும் சுரண்டலுக்கு உள்ளாக்கியது.

சமூக நீதி, பிராமண எதிர்ப்பு என்ற முழக்கங்களுடன் உருவான திராவிட இயக்கம், தொடக்கத்தில் பண்ணையார்களை எதிர்த்துப் பேசினாலும், அரியணை ஏறிய பின்னர், ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதுபோல் ஏழை மக்களை ஏறி மிதிக்கவே செய்தது.

நில உச்சவரம்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றினாலும், அளவுக்கு மீறிக் குவிந்திருந்த நிலத்தைப் பறிக்காமல், நிலக்குவியலுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளையே அந்த ஆட்சி செய்தது.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எப்படித் தீவிரமாகப் போராடியதோ, அதே நேரத்தில் உள்நாட்டில் சுரண்டிக் கொழுத்த பண்ணையார்கள், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் வீரச்சமர் புரிந்தது கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமே.

நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்ட வரலாறுதான் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு ஓரளவு விடுதலையைப் பெற்றுத் தந்தது என்பது மறுக்க முடியாத வரலாறு.

அந்தப் போராட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், அந்த வரலாற்றின் நாயகர்களில் ஒருவரான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியைப் போற்றுவதுமே இந்த நூற்றாண்டு விழாவின் நோக்கம்.

சோழர் காலத்து வேர்கள் (கி.பி. 871–1279)

நிலம் சிலர் கையில் குவியத் தொடங்கியதன் வேர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிந்துவிட்டன.

தொடர்ச்சி ii ஆம் பக்கம்

பிற்காலச் சோழர் காலத்து (கி.பி. 871–1279) உற்பத்தி உறவுகளை அறிந்துகொள்ளக் கல்வெட்டுகள் ஏராளமான சான்றுகளைத் தருகின்றன. சோழர் கால நிலவுடைமை பற்றிச் சில ஆய்வுகள் இருந்தாலும், மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தொடக்கத்தில் நிலம் அனைவருக்கும் சொந்தமாக இருந்தது; தனியுடைமையாக இல்லை. ஊர்மக்கள் உழைத்து உற்பத்தி செய்து, ஒரு பகுதியை அரசுக்கு வரியாக அளித்துவிட்டு, மீதியைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் நடைமுறையே இருந்தது.

பிற்காலச் சோழர் ஆட்சியில் நிலத்தின் ஒரு பகுதி சமூகத்திற்கு பொதுவில் இருந்தாலும், தனிநில உடைமை பெருமளவில் உருவாக்கப்பட்டது.

மக்களில் மிகப் பெரும்பான்மையினரின் வாழ்வாதாரம் வேளாண்மையே. ஆனால் நிலவுடைமை அமைப்பில் மேலாதிக்கமும் அதிகாரமும் பிராமண, வேளாள நிலப்பிரபுக்களின் கையில் இருந்தன.

கோயில்களுக்கு தேவதானம், பிராமணர்களுக்கு பிரம்மதேயம், வேளாளர்களுக்கு வேளாண் வகை, அதிகாரிகள், தேவரடியார்கள், படைவீரர்களுக்குப் பிழைப்புக்காக ஜீவிதம் என நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தேவதானமும் பிரம்மதேயமும் இறையிலி, அதாவது வரியே இல்லாத நிலங்கள்; சில ஜீவித நிலங்களுக்கும் வரிவிலக்கு இருந்தது. வரியற்ற நிலம் தொடர்ந்து விரிவடைந்தது; சோழர் காலம் முதலே பெரும் கோயில்கள் ஏராளமான நிலங்களை வைத்திருந்தன.

வரியற்ற நிலங்களின் சுமையும் சேர்ந்து உழைப்பாளிகளின் தலையில் விழுந்தது. சோழர் ஆட்சியில் 16 விதமான வரிகளைப் போட்டு மக்களை வதைத்தனர். கடமை, காணிக்கடன், இறை எனப்பட்ட நில வரியாக மட்டும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு பறிக்கப்பட்டது.

இடையர்கள் மீது இடைப்பாட்டம், நெசவாளர் மீது தறியிறை, பொற்கொல்லர் மீது தட்டார்பாட்டம், பசு வைத்திருந்தால் நல்லா, எருது வைத்திருந்தால் நல்லெருது, தண்ணீருக்கு நீர்க்கூலி, படகுக்கு ஓடக்கூலி, ஊடுபயிருக்கு ஊடுபோக்கு, கீரை பயிரிட்டால் இலைக்கூலம் என வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் வரி. கூலியில்லாக் கட்டாய உழைப்பான ‘வெட்டி’ கல்வெட்டுகளில் அடிக்கடி இடம்பெறுகிறது.

வரி செலுத்த முடியாமல் ஊர் மக்கள் ஊரையே விட்டு ஓடிய நிகழ்வுகளும், வரி அதிகாரிகளின் துன்புறுத்தல் பற்றி மக்கள் முறையிட்டதும் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

வரிக் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். மேலாதிக்கம் பெற்ற பிராமண, வேளாள நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும், பல்வேறு பிரிவு மக்களின் உரிமைகளுக்காகவும் மீண்டும் மீண்டும் கிளர்ச்சிகள் வெடித்தன.

வலங்கை, இடங்கைப் பிரிவுகளுக்கு இடையே பரவலான கலவரங்கள் நடந்தன; ராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம் தீக்கிரையானது. இக்கலவரங்களில் அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1070) கொல்லப் பட்டதாகச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்; முதலாம் குலோத்துங்கன் இந்த மோதலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டதும் வரலாறு.

மராட்டியர் ஆட்சியில் மிராசுதாரர்களின் எழுச்சி

மராட்டியர் ஆட்சியில் நில வரி மதிப்பீடு செங்குத்தாக உயர்ந்தது. வரி வசூலுக்காக வளங்களை ஒன்றுதிரட்டிய மிராசுதாரர்கள் என்ற செல்வாக்குமிக்க நிலவுடைமை வர்க்கம் இக்காலத்தில் உருவெடுத்தது.

கிராமத்துக்குள் அன்றாடப் பரிவர்த்தனைகள் நெல் அடிப்படையிலேயே நடந்தன; பணப் புழக்கம், நகர வணிக மையங்களில் நிலப்பிரபுக்கள் வாங்கிய ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே பெரும்பாலும் இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இறுகிய பிடி

வருவாயைப் பெருக்குவதே குறிக்கோளாகக் கொண்ட காலனி ஆட்சி, நிலப்பிரபுக்களின் பிடியை மேலும் இறுக்கியது.

1799இல் தஞ்சை ஆங்கிலேயர் வசமானது. இந்தியாவை மூலப்பொருள் வழங்கும் நாடாகவே நடத்திய ஆங்கிலேயருக்கு, செழிப்பான வேளாண்மையைக் கொண்ட தஞ்சை வருவாயைப் பெருக்கும் முக்கியக் களமானது.

1800இல், ஒரே நிலப்பிரபு ஒரு தாலுகா முழுவதும் தானியச் சந்தையைக் கட்டுப்படுத்தினார்; அத்தகையோர் பல கிராமங்களிலும் தாலுகாக்களிலும் சிதறிய 3,000 முதல் 4,000 ஏக்கர் நிலம் வைத்திருந்தனர் என்று ஆங்கிலேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

1805 கணக்குப்படி தஞ்சையின் 5,783 கிராமங்களில் 1,774 கூட்டு உடைமைக் கிராமங்கள்; 2,202 கிராமங்களில் விளைநிலம் தனித்தனியாகவும் பிற உரிமைகள் பொதுவிலும் இருந்தன; 1,807 தனிநபர் உடைமைக் கிராமங்கள்.

நன்செய்ப் பகுதிகளில் கூட்டு, பொது நில உடைமை பரவலாக இருந்தது. சில கிராமங்களில் நிலத்தை அவ்வப்போது மறுபங்கீடு செய்யும் முறை 1921 வரை நீடித்தது.

1808–1822 காலத்தில் ஆங்கிலேயர் கிராமக் குத்தகை முறையைக் கொண்டுவந்தனர்: முதலில் மூன்றாண்டு, பின்னர் பத்தாண்டுக் குத்தகை. இது சோழர் கால முறையை ஒத்தது என்று அவர்கள் நியாயப்படுத்தினர்.

ஆங்கிலேயர் நில உடைமை முறையையே மாற்றியமைத்தனர். சென்னை மாகாணத்தில் ஒருபுறம் ஜமீன்தாரி முறை: அதாவது, நிலங்களை ஜமீன்தார்களிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலம் வரி வசூலிக்கும் முறை (1802 நிரந்தரக் குடியிருப்பு).

மறுபுறம் ரயத்துவாரி முறை: நிலத்துக்கு உரிமையாளராகப் பதிவு செய்யப்பட்டவரிடமிருந்து அரசே நேரடியாக வரி வசூலிக்கும் முறை (தாமஸ் மன்றோ காலத்தில் விரிவாக்கப்பட்டது).

ஆனால் தஞ்சையில் ‘உரிமையாளர்’ என்று பதிவானவர்கள் நிலத்தில் உழைத்தவர்கள் அல்ல; மிராசுதாரர்களே. சென்னை மாகாணத்திலேயே மிராசுதாரர்களின் கையில் மிக அதிக விகிதத்தில் நிலம் இருந்த மாவட்டம் தஞ்சைதான்.

இதனுடன் உக்கடை, பூண்டி, குன்னியூர், கபிஸ்தலம், வடபாதிமங்கலம், மதுக்கூர், பாப்பா நாடு போன்ற ஜமீன்களும் தஞ்சை மாவட்டத்தில் இருந்தன.

ஆங்கிலேயக் கொள்கைகளால், கடன் கொடுப்போர் விவசாயிகளின் நிலத்தைப் பறித்தனர்; அறுவடைக் காலக் குறைந்த விலையில் விளைபொருளை வாங்கினர்; விதையும் கருவிகளும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

இனாம் எனப்பட்ட வரியற்ற மானிய நிலங்கள் பெருமளவில் இருந்தன. பெரும் கோயில்கள் தம் நிலங்களை உள்குத்தகைக்கு விட்டதால் குத்தகைதாரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நில உடைமை முறையே கிராமப்புறச் சமூக அமைப்பையும் விவசாயிகளின் வாழ்நிலையையும் தீர்மானித்தது.

கீழத்தஞ்சையின் நிலச் சீமான்கள்

விடுதலைக்கு முந்தைய கீழத்தஞ்சையில் நிலம் ஒரு சில குடும்பங்களின் கையில் மலைபோலக் குவிந்திருந்தது.

வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் குடும்பம்: 15,000 ஏக்கர்; குன்னியூர் சாம்ப சிவ ஐயர்: 7,000 ஏக்கர்.

கே.ஜி.எஸ். எஸ்டேட்ஸ்: 4,000 ஏக்கர்; கே.டி.கே. எஸ்டேட்ஸ்: 3,000 ஏக்கர்.

ராவ்பகதூர் சாமியப்ப முதலியார்: 2,500 ஏக்கர்; மூலங்குடி கோபால கிருஷ்ண அய்யர்: 2,000 ஏக்கர்; கே.எம்.தேசிகர்: 1,500 ஏக்கர்.

கோயில், மடங்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் டிரஸ்டுகளுக்கு இதே சீமான்களே டிரஸ்டிகள்.

நில வங்கி, கூட்டுறவு வங்கிகள், கந்துவட்டி அனைத்தும் இவர்கள் கட்டுப்பாட்டில்; கிராமப் பொதுச் சொத்துக்கள், குளங்கள், ஏரிகளின் மீன்வளம் அனைத்தும் இவர்களுக்கே சொந்தம்.

மறுபக்கம் குத்தகை விவசாயிகள்: “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது” என்ற அவல நிலை.

பண்ணையாளுக்கு நாள் கூலி பட்டணம்படி ஒரு படி நெல் மட்டுமே; ஒரு பண்ணையாள் குடும்பத்தின் ஆண்டுக் கூலி ரூ.160 மட்டுமே.

பண்ணையடிமை எனும் இருண்ட சிறை

கீழத்தஞ்சை, நில உடைமையாளர்களின் இருண்ட அடக்குமுறைச் சிறையாகத் திகழ்ந்தது.

உலகில் வேறெங்கும் இல்லாத தண்டனை முறை: சவுக்கடி, வாயில் சாணிப்பால் ஊற்றுதல். சவுக்கடியில் ரத்தம் பீறிடும்; வலி தாங்காமல் கத்தினாலும் ‘அய்யோ’ என்று அல்ல, ‘அய்யா’ என்றுதான் கத்த வேண்டும்.

கணவனை அடிக்கும்போது மனைவியோ, மனைவியை அடிக்கும்போது கணவனோ தடுக்க முடியாது.

பிள்ளைகள் பிறந்தது முதல் பண்ணை வீட்டு மாட்டுத் தொழுவங்களில்தான் வாழ வேண்டும்; பள்ளிக்குச் செல்ல முடியாது; ஆடு, மாடுதான் மேய்க்க வேண்டும்.

திருமணத்துக்கும் பண்ணையாரின் அனுமதி வேண்டும்; மணமக்கள் நேராகப் பண்ணையார் காலில் விழுந்த பிறகுதான் வீடு செல்ல முடியும்.

கொடுமை தாங்காமல் இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் என ஓடியவர்களைக் கப்பல் ஏறும் முன்பே பிடித்துவந்து சித்திரவதை செய்தனர்.

கள்ளுக்கடைகளில் தனிக் கலயம்; டீக்கடைகளில் தனிக் குவளை. பொருளாதார ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் கைகோர்த்தன.

பண்ணையடிமைகள் பல சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இருப்பிடம், உடை, கூலி, வேலை அனைத்தும் ஒரே மாதிரிதான்.

செங்கொடி எழுந்தது, சாட்டை வீழ்ந்தது

தலைவிதி என்று தாங்கிக்கொண்டிருந்த மக்களைத் தட்டி எழுப்பியது செங்கொடி இயக்கம்; பண்ணையாரின் கையிலிருந்த சாட்டையைப் பறித்தது.

மன்னார்குடி தாலுகா தென்பரை கிராமத்தில் மடத்து ஏஜெண்டுகள் தொடர்ந்து குத்தகையை உயர்த்தினர். அதை எதிர்த்த போராட்டத்தின் மீது குண்டர்கள் ஏவப்பட்டனர்; விவசாயிகள் அடிபணிய மறுத்தனர்.

முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது; விவசாயிகள் வெற்றி பெற்றனர்; கீழத்தஞ்சையில் பெரும் எழுச்சி பிறந்தது.

கன்னடத்து ஐயர் குடும்பதில் பிறந்த பி.சீனிவாசராவ் தாழ்த்தப்பட்டோர் வீடுகளில், அவர்கள் பாத்திரத்திலேயே உணவு உண்டார்; பாய் இல்லாவிட்டாலும் தரையில் அமர்ந்தார்.

“ஆண்டைகளும் மனிதர்கள்தான்; நீங்களும் மனிதர்கள்தான். அடித்தால் திருப்பியடி; சாணிப்பால் கொடுத்தால் குடிக்காதே; உழைப்புக்கேற்ற ஊதியம் கேள்” — இதுவரை எவரும் சொல்லாத ‘அடிக்கு அடி’ என்ற முழக்கத்தை முழங்கினார் சீனிவாசராவ்.

“நீங்கள் அனைவரும் விவசாய சங்கத்தில் சேருங்கள்; என்ன வந்தாலும் எதிர்கொள்வோம்; சங்கம் உங்களைக் காப்பாற்றும்” என்று அழைத்தார்.

களப்பால் போராட்டத்தின் விளைவாக 1944இல் ஒப்பந்தம் கையெழுத்தானது: சாணிப்பால், சாட்டையடி நிறுத்தப்பட வேண்டும், கூலி உயர்வு வேண்டும்.

சட்டமும் போலீசும் செய்யாததைச் சங்கம் சாதித்தது. நூற்றாண்டுகளாக நீடித்த சவுக்கடியை எந்தச் சட்டமும் நிறுத்தவில்லை; செங்கொடியின் கீழ் அணிதிரண்ட உழைப்பாளிகளின் ஒற்றுமையே நிறுத்தியது.

இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய களப்பால் குப்பு சிறையில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்.

விவசாயிகள் சங்கத்தின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய மிராசுதாரர்கள், விவசாயிகள் சங்கக் கூட்டங்களுக்கு அனுமதி மறுத்தனர்; ரௌடிகளை ஏவித் தாக்கினர்; அதே இடத்தில் காங்கிரஸ் தலைவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினர்.

தேசிகர் போன்ற பெரிய மிராசுதாரர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாகச் சென்னை மேல்சபைக்குச் சென்றனர்; வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் ஆங்கிலேயர் தந்த ‘ராவ்சாஹிப்’ பட்டத்தைத் துறந்து காங்கிரசில் சேர்ந்தார். அவர்கள் வந்தது தேசபக்தியால் அல்ல; விவசாயிகள் சங்கத்தை நசுக்கவே.

காங்கிரஸ் அமைச்சர்கள் பண்ணையார்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்; “கம்யூனிஸ்டுகளை அடக்கியே தீருவோம்” என்று கொக்கரித்தனர்.

காவல்துறை கிராமம் கிராமமாக முற்றுகையிட்டு மக்களை அடித்து நொறுக்கியது. உள்ளூர் போலீஸ் மட்டுமின்றி மலபார் சிறப்புப் போலீஸ் வரவழைக்கப்பட்டு அடக்குமுறைப் பேயாட்டம் ஆடியது. எண்ணற்ற வழக்குகள், சிறைவாசம், சித்திரவதைகள் தொடர்ந்தன.

ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. அதன் விளைவாக 1952இல் வாரக் குத்தகை விவசாயிகள் – பண்ணையாள் பாதுகாப்பு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது: சாகுபடி செய்யும் எந்தச் சாகுபடியாளரையும் வெளியேற்றக் கூடாது என்பதே அது.

மொத்த விளைச்சலில் 40 சதம் மட்டுமே குத்தகையாக அளிக்க வேண்டும்; அதைப் பெற்றுக்கொண்டு மிராசுதாரர் ரசீது தர வேண்டும்.

பண்ணையாட்களை வேலையிலிருந்து நீக்கக் கூடாது; நீக்கினால் 6 மாதக் கூலி அல்லது ரூ.150 தர வேண்டும்.

இந்த சட்டத்தின் வெளிச்சத்தில், மேலும் கூலிப் போராட்டம் தீவிரமடைந்தது அதன் உச்சம் தான் 1968 டிசம்பர் 25: கீழ்வெண்மணியில், பெண்களும் குழந்தைகளும் உட்பட 44 விவசாயத் தொழிலாளர்கள் ஒரு குடிசைக்குள் வைத்து உயிரோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்டனர். செங்கொடி இயக்கத்தின் வரலாற்றில் ரத்தத்தால் எழுதப்பட்ட அத்தியாயம் வெண்மணி.

இந்தக் கொடுமை குறித்துச் சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக்கூட அன்றைய திமுக ஆட்சி அனுமதிக்கவில்லை; சம்பவ இடத்துக்கு ஒரு அமைச்சர்கூட வந்து ஆறுதல் கூறவில்லை.

மாறாக, அரசுத் தரப்பிலும் காவல்துறைத் தரப்பிலும் இந்தப் படுகொலை “உள்ளூர் கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்கும் வெளியூர் நபர்களுக்கும் இடையிலான மோதல்” என்று சித்தரிக்கப்பட்டு, பத்திரிகைகளில் அவ்வாறே செய்தி வெளியானது.

அன்றும் இன்றும் நிலத்தைச் சாகுபடி செய்பவர்களின் உரிமைக்காக உறுதியாகப் போராடுவது கம்யூனிஸ்ட் இயக்கமே. “நிலத்திலிருந்து குத்தகைதாரரையும், அதை நம்பி வாழும் மக்களையும் வேரோடு பிடுங்கி எறிய முடியாது” என்று முழங்கிய இயக்கம் அது.

தொடர் போராட்டங்களின் விளைவாகச் சாகுபடிதாரர் – பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம், நியாயவாரச் சட்டம், குறைந்தபட்சக் கூலிச் சட்டம், நில உச்சவரம்புச் சட்டம் எனப் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தலையில் கட்டியிருந்த வேட்டியை இடுப்பில் கட்டவும், தொடை வரை மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்ட உடையைக் கணுக்கால் வரை இறக்கிக் கட்டவும் உரிமை பெற்றுத் தந்தது செங்கொடி இயக்கம். அது துணிக்கான உரிமை அல்ல; மனித மாண்புக்கான உரிமை.

பட்டியலின மக்களையும், பிற்படுத்தப்பட்ட பல்வேறு சாதிகளைச் சேர்ந்த உழைப்பாளி மக்களையும், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மிராசுதாரர்களும் ஆட்சியாளர்களும் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தினர்.

அனைத்துச் சாதி உழைப்பாளி மக்களையும் ஒன்றிணைத்து, நிலப்பிரபுத்துவத்தையும் சாதிய மேலாதிக்கத்தையும் ஒருசேரத் தகர்த்த வரலாறு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு; அது நம்முடைய வரலாறு.

இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் மணலூர் மணியம்மை, மணலி கந்தசாமி, கே.ஆர்.ஞானசம்பந்தம், கே.பி.நடராஜன், கோ.பாரதி மோகன், கோ.வீரையன் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் தஞ்சை மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்.

இந்த உரிமைகளுக்கான விலை உயிர்கள்: களப்பால் குப்பு, ஜாம்பவான் ஓடை சிவராமன், சிக்கல் பக்கிரிசாமி, கோட்டூர் ராஜு, திருவிடைமருதூர் நாகராசன், மன்னார்குடி கோவிந்தன், பூதங்குடி பக்கிரிசாமி, என்.வெங்கடாஜலம், குடவாசல் தங்கையன் உள்ளிட்ட பல தோழர்கள் நிலச்சுவான்தார்கள் மற்றும் சமூக விரோதிகளின் தாக்குதல்களால் உயிர் நீத்தனர்.

பண்ணையடிமையின் மகன், பாட்டாளிகளின் தலைவன்: தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி

அந்த இருண்ட சிறைக்குள் பிறந்து, அதன் கம்பிகளை உடைத்தவர்களில் முன்னணியில் நின்றவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி.

பண்ணையடிமையார்களின் சாத்தனின் மகனாகப் பிறந்தவர் தனிக்கொடி. பண்ணையார் அடித்தபோது திருப்பி அறைந்த சாத்தான், குடும்பத்துடன் விளத்தூரை விட்டுப் பாங்கலுக்கு ஓடினார். எதிர்ப்பின் முதல் பாடம் தந்தையிடமிருந்தே கிடைத்தது.

மணலில் எழுதக் கற்று, பண்ணைச் சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார் சிறுவன் தனுஷ்கோடி. “எங்கள் சொத்தில் பாகம் கேட்கவா?” எனத் தந்தை அடித்துத் துவைக்கப்பட்டார்; தனுஷ்கோடி மாடு மேய்க்கப் பண்ணைக்கு அனுப்பப்பட்டார்.

களப்பாலில் குளத்தில் தண்ணீர் குடித்ததற்காக ரத்தம் வரும்வரை கம்பால் அடிக்கப்பட்டார்.

‘ஆதிதிராவிடர் வாலிபர் சங்கம்’ அமைத்து, சேரித் தெருக்களைச் சீர்செய்தார்; தாழ்த்தப்பட்டோருக்கென்று குளம் வெட்டினார். அந்தக் குளத்தையும் நிலப்பிரபுக்கள் கைப்பற்றிக்கொண்டனர்.

காங்கிரஸ் ஊர்வலத்தில் அக்ரஹாரத்துக்குள் நுழைந்ததற்காக, பிராமண நிலப்பிரபுக்கள் புளிய விளாரால் ரத்தம் சொட்ட அடித்தனர்; “உன்னைக் குழி தோண்டிப் புதைத்திருக்கணும்” என்றார் காங்கிரஸ் தலைவர்.

81.பெரியார், அம்பேத்கர் பேட்ஜ் அணிந்து டீக்கடைக்குச் சென்றபோது, திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கடைக்காரரும் மற்றவர்களும் அடித்தனர். சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை உணர்ந்தார் பி.எஸ்.டி.

1942இல் ‘ஜனசக்தி’ மூலம் சீனிவாசராவைப் பற்றி அறிந்தார்; அறுவடைக் கூலி நெல்லை விற்ற ஏழு ரூபாயுடன், ஏழெட்டு இளைஞர்களோடு களப்பாலுக்கு நடந்தார்.

தொடர்ச்சி iii ஆம் பக்கம்

சீனிவாசராவின் ‘அடிக்கு அடி’ உரை அவருக்கு நம்பிக்கையையும் துணிவையும் உறுதியையும் தந்தது. ஊர் திரும்பி, பாங்கலில் விவசாய சங்கத்தை உருவாக்கினார்.

அறுவடைக் களத்துமேட்டில் நின்று நிலப்பிரபுக்களின் சூழ்ச்சிகளைக் கண்காணித்தார்; விவசாயக் கூலிகள் நியாயமான கூலி பெற்றனர். அந்த நம்பிக்கையில் பல கிராமங்களில் சங்கம் கட்டினார்.

நிலப்பிரபுக்கள் அவரது பெற்றோரிடம் “எங்களுக்கும் மகனுக்கும் சம்பந்தமில்லை” என்று எழுதி வாங்கினர்; அவரைக் கொல்லக் குண்டர்களை ஏவினர். அதே காலத்தில் பாங்கல் கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராணுவத்தில் சேர்ந்து கொழும்புவுக்குச் சென்றார். அங்கிருந்து அனுப்பிய மணியார்டர் கடிதத்தில் “சங்கத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; தொல்லை தரும் நிலப்பிரபுக்களின் பெயர்களை எழுதுங்கள்” என்று கேட்டிருந்தார். அதைப் படித்த நிலப்பிரபுக்கள் அஞ்சி நடுங்கினர்.

போர் முடிந்து திரும்பியதும், சீனிவாசராவின் அழைப்பை ஏற்று முழுமையாகச் சங்கப் பணியில் இறங்கினார். 1945இல் பரீட்சார்த்த உறுப்பினராகவும், 1946இல் கட்சி உறுப்பினராகவும் சேர்ந்தார்.

173 பேர் மீது தொடுக்கப்பட்ட நெடும்பலம் சதி வழக்கில் அவரும் ஒரு எதிரி. அப்போது ஆலத்தம்பாடி ரேஞ்சு கமிட்டித் தலைவராக, இரவுகளில் மட்டுமே கிராமங்களுக்குச் சென்று இயக்கத்தை நடத்தினார்.

கொளப்பாட்டில் கைது செய்யப்பட்டு, நிலப்பிரபு தேசிகரின் பங்களாவில் குதிகாலில் லத்தியால் இடித்துச் சித்திரவதை செய்யப்பட்டார். “மணலி கந்தசாமி எங்கே? சிவராமன் எங்கே?” என்ற கேள்விகளுக்கு ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை.

திருச்சி சிறையில் மூன்றரை ஆண்டுகள். புதுச்சட்டி கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்; நல்ல தண்ணீர் கேட்டதற்காகக் கூழாங்கற்கள் மீது மண்டியிட வைத்து அடிக்கப்பட்டார். ஆனாலும் பணியவில்லை.

91.பண்ணையார்களை மிரட்டினார் என்று அவர் மீது மட்டும் 57 வழக்குகள். சிறையில், சக கைதிகள் மூலம் சரளமாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்.

சிறையில் இருந்தபோதே தாயாரையும், தலைவர் சீனிவாசராவையும் இழந்தார்.

93.1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முழுமூச்சுடன் பங்காற்றினார்; அந்த ஆண்டே மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1958 முதல் பாங்கல் ஊராட்சி மன்றத் தலைவராக, தொடர்ந்து முப்பது ஆண்டுகள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்ணையடிமையாக இருந்தவர், அதே மண்ணில் மக்கள் தலைவரானார்.

1967இல் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரானார்; கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்காகத் திருவாரூர் அரசு கலைக்கல்லூரியைக் கொண்டுவந்தார்.

1970, 1986இல் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர். கிராமங்களில் பள்ளிகள் கட்ட முன்னுரிமை தந்தார்; நிலப்பிரபுக்கள் ஆக்கிரமித்த குளங்களை மீட்டார். சிறுவயதில் அவர் வெட்டிய குளத்தைப் பறித்தவர்களிடமிருந்து, மக்களின் குளங்களைத் திரும்பப் பெற்றுக் கொடுத்தார்.

வாழ்நாளில் 9 ஆண்டு 9 மாதம் சிறைவாசம், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை. கட்சி மாநாடுகளின் தகுதிகாண் அறிக்கைகளில், அதிக காலம் சிறையில் இருந்தவர் என்ற வரலாறு படைத்தவர்.

திருத்துறைப்பூண்டி தாலுகா குழு, தஞ்சை மாவட்டக்குழு, மாநிலக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்; 1964 முதல் இறுதிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்.

“எழுதப் படிக்கத் தெரியாத, பண்ணையடிமையாக இருந்த என்னை, வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி, மக்கள் ஊழியனாகத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த கட்சியின் உறுப்பினராகச் செயல்படுவதே பெருமை” என்றார் தோழர் பி.எஸ்.டி.

1997 ஆகஸ்ட் 19 அன்று மறைந்தார். 52 ஆண்டுக் கம்யூனிஸ்ட் வாழ்வு அவருடையது. சென்னை தாம்பரத்தில் உள்ள விவசாயிகள் சங்க மாநில அலுவலகம் இன்றும் அவர் பெயரைத் தாங்கி நிற்கிறது. சவுக்கடியில் தொடங்கிய வரலாறு, செங்கொடியின் வெற்றியில் நிறைவடைகிறது.

செவ்வணக்கம்

தோழர் பி.எஸ்.டி.!