பெண்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்பை உறுதி செய்திடுக சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் வலியுறுத்தல்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>பெண்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்பை உறுதி செய்திடுக சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் வலியுறுத்தல்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 8- பெண்கள் அனைவருக்கும் கண்ணி யமான வேலை வாய்ப்பையும், பாது காப்பையும் உறுதி செய்து, சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நிலை நாட்ட வேண்டும் என சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட் டது. ஈரோடு பெரியார் மன்றத்தில், சர்வ தேச மகளிர் தின கருத்தரங்கம் ஞாயி றன்று நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன் வரவேற்றார். டிஆர்இயு நிர்வாகி எஸ்.கோமதி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க நிர்வாகிகள் என்.ரேவதி, கே. தனலட்சுமி மற்றும் கட்டுமானத் தொழி லாளர் சங்க நிர்வாகி ஆர்.சரோஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் எம்.கிரிஜா சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், பொருளாளர் சுரேஷ்பாபு, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஜெ.அருந்ததி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.நர்மதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பீடித் தொழிலாளர் சங்க தலைவர் பி.சித்தாரா பேகம் நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி முத்து இல்லத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற மகளிர் தின கருத்தரங்கத்திற்கு, சங்கத்தின் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் பி.மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஏ.தெய்வானை வரவேற்றார். மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன் துவக்க வுரையாற்றினார். மாநில துணைக்குழு முன்னாள் அமைப்பாளர் பி.எஸ்.இள வேனில், தமுஎகச மாவட்ட நிர்வாகி சுகந்தி பாஸ்கர் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இவ்விழாவில், எம்ஆர்பி செவிலியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வெற்றி பெற முன்னின்ற அரசு ஊழியர் சங்க தலைவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், உறுதிமிக்க போராட்டம் நடத்தி வெற்றி கண்ட செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில், மாவட்ட இணைச்செயலாளர் கே.தேவகி நன்றி கூறினார். இதேபோன்று, சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சிஐடியு, மாதர் சங்கம், விவசாயத் தொழிலா ளர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கங்கள் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலை வர் சி.கலாவதி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். மல்லிகா, தலைவர் ஏ.ஜெயா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் ஜி.பாண்டியம்மாள், அங்கன் வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் லில்லி புஷ்பம், மாவட்டச் செயலா ளர் சி.கவிதா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அங்கம்மாள், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச்செயலாளர் உமா ராணி சிறப்புரையாற்றினர். கோவை கோவை மாவட்டம், துடியலூர் பேருந்து நிலையம் அருகே மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் தண்டபாணி தலைமை வகித் தார். மாவட்ட துணைச்செயலாளர் முத்து முருகன், ஒன்றியச் செயலாளர் பிரகதீஸ்வரன், விதொச மாவட்ட துணைத்தலைவர் ஆர்.செல்வராஜ், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் புஷ்ப லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். சேலம் சேலம் மாவட்டம், எடப்பாடியி லுள்ள கலைமகள் நர்சரி மற்றும் பிரை மரி பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிளை துணைத்தலைவர் பூஜா தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகா வரவேற்றார். மருத்துவர் கஸ்தூரி, வழக்கறிஞர் அருணா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகி கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் செங்கோட்டுவேல், “அறிவியலில் பெண்கள்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். முடி வில், கிளைப் பொருளாளர் பூபாலன் நன்றி கூறினார். நாமக்கல் சர்வதேச பெண்கள் தினம் மற்றும் கருத்தரங்க பிரச்சார இயக்க நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. முடிவில், சிஐடியு நாமக்கல் அலுவலகத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார் பில் கருத்தரங்கம் ஞாயிறன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு தமுஎகச மாவட்டப் பொருளாளர் ஆர்.மாதவி தலைமை வகித்தார். உழைக்கும் பெண் கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி மலர்கொடி வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் நா.வேலுச்சாமி, மாவட்ட உதவிச்செயலாளர் சு.சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.</p>
