புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக மாதர் சங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பு வலியுறுத்தல்
8 Apr 2026, 5:30 am

புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக

புதுச்சேரி, ஏப். 7- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களின் பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிர் உதவி மையங்கள் சிறப்பாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.