புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக
8 Apr 2026, 5:30 am

புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக

மாதர் சங்கம் உள்ளிட்ட கூட்டமைப்பு வலியுறுத்தல். புதுச்சேரி, ஏப். 7- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இலாசுப் பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முனி யம்மாள் தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க நிர்வாகிகள் சந்திரா, மாரிமுத்து, அனபாயி, ஜானகி உட்படப் பலர் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அத்தியாவசியப் பொருட்கள், தமிழகம் மற்றும் கேரளாவைப் போலவே புதுச்சேரியிலும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பண்டங்களைக் குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். கல்வி, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது கைத்தறி, கைவினைத் தொழில்கள் குறித்து பயிற்சி அளித்து இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

கல்வி நிலை யங்களில் பாலியல் வன்கொடுமைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்புப் பெண் களுக்குப் பெண் குழந்தை களுக்கான உரியப் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் விடுதிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புதுச்சேரியின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மகளிர் ஆணையம் புதுச்சேரி மகளிர் ஆணையம் சுயமாகச் செயல்பட வேண்டும். அது பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கு வழிகாட்டக் கூடிய தாக இருக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் ஒரு அங்கமாகச் செயல்படக் கூடாது. குழந்தைகளுக்கு நகை பெற்றோர் மற்றும் உறவி னர்கள் இறந்த குழந்தை களுக்குப் பாதுகாப்பு வழங்க அரசு சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களைத் தொடங்க வேண்டும்.

பேருந்துகளில், புதுச்சேரி முழுவதும் மகளி ருக்குக் கட்டண மில்லாப் பேருந்து வசதியை இயக்கிட வேண்டும். சமூக நலத் துறைச் சான்றுகளைத் தற்போதைய நடைமுறைப்படி அங்கிருந்து பெற வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க வேண்டும்.

உதவித்தொகை: தனித்து வாழும் பெண்க ளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3,000 ரூபா யாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளி பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, இடைக்கால நிவாரணமாக மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.