மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதி செய்க!
1 Mar 2026, 4:03 pm
<p><strong>மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதி செய்க</strong></p>
<p>திருநெல்வேலி, மார்ச் 1- மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு: மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி யில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய எஸ்டேட் பகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 1050 வாக்கா ளர்கள் வாக்களித்துள்ளனர். தற்போது நடை பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, அங்கு குடியிருக்கும் 750-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். ஆனால் வரைவு வாக்காளர் பட்டி யலில் 78 பெயர்களைத் தவிர இதர வாக்கா ளர்கள் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து மாஞ்சோலை மக்கள் முறை யீடு செய்த பிறகு, 635 வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலு வலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்கா ளர் பட்டியலில் 635 வாக்காளர்களது பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு வேறு எங்கும் வாக்குகள் இல்லை. அவர்களிடம் மாஞ்சோலை பகுதியில் குடியிருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்கா ளர் அட்டை போன்ற சான்றுகள் இருந்த போதி லும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டம் பிரிவு 326 வழங்கி உள்ள வாக்களிக் கும் உரிமைக்கு எதிரானது. அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகளின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் உரிமை என்பது இந்திய குடிமக்களின் சட்டப்பூர்வமான உரிமை யாகும். எனவே மாஞ்சோலை பகுதி மக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் கள் சேர்க்கப்பட வேண்டும். சட்டமன்றத் தேர்தலின் போது அங்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மூன்று வாக்குச் சாவடி களில் வாக்களிக்கும் ஏற்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p>
