மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கி எண்ணூரில் பல்முனை போக்குவரத்து மையம் வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
6 Oct 2026, 1:28 am

மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கி எண்ணூரில் பல்முனை போக்குவரத்து மையம் வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, அக். 5-வடசென்னை குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பும், கிராம ஒருங்கிணைப்பு சங்கமும் இணைந்து திருவொற்றியூர் மண்டல வளர்ச்சிக்கான மக்கள் சங்கமம் நிகழ்ச்சி எர்ணாவூரில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கி னார்.

கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் பேசுகையில், ஒட்டு மொத்த சென்னை பெருநகர வளர்ச்சி திட்டங்களில் வடசென்னை துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதி முழுமையாக துண்டிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சி திட்டம் இந்தப் பகுதிகளுக்கு மிக மிக அவசிய மாகும். கூட்டமைப்பின் தொடர் முயற்சியின் விளைவாக இப்போது மாதவரம் அசிசி நகரிலிருந்து விம்கோ வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுவனம் விரிவான திட்ட அறிக்கையை கோரி ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த விரிவாக்கம் மக்களுக்கு பயன்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். மாதவரம் அசிசி நகர் துவங்கி மாத்தூர், மணலி, மணலிநியூ டவுன், எண்ணூர், எர்ணா வூர் வழியாக விம்கோவில் இணைக்கப் பட்டால்தான் மக்களுக்கு இந்த சேவை பயன்படும்.

எண்ணூர் துவங்கி மகாபலிபுரம் வரை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையையும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுவனம் கோரியுள்ளது. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு எண்ணூரில் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பஸ் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து ஆகிய நான்கையும் ஒருங்கிணைக்கக் கூடிய வகையில் "எண்ணூர் பல்முனை போக்குவரத்து மையம்" உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல் இப்போது கனரகவாகனங்களின் சரக்கு போக்கு வரத்தும், மக்களின் பயண போக்குவரத்தும் ஒரே சாலையில் இருப்பதால் கடுமையான அழுத்தம் குடியிருப்பு பகுதிக்கு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல், விபத்து, உயிரிழப்பு பெரும் பிரச்சனையாக இப்பகுதியில் உள்ளது. எனவே இப்போது அரசின் ஆலோசனையில் உள்ள சரக்கு போக்குவரத்துக்கான மணலி எண்ணெய் சுத்திகரிப்பு சாலைக்கு பேரலல் வழித்தடமாக மெட்ரோ ரயில் சேவை இருந்தால் சிரமமின்றி பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த முடியும். எனவே எந்த ஒரு திட்டத்தையும் உரு வாக்கும் போது அது மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய வகையில் ஒரு தொலைநோக்கு திட்டமாக உரு வாக்கப்படுவது அவசியம். அந்த வகை யில் சரக்கு போக்குவரத்துக்கும், மக்களது போக்குவரத்துக்கும் பாதிப்பில்லாத ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டமாக மெட்ரோ ரயில் வழித்தடத்தையும், வாட்டர் மெட்ரோ வழித்தடத்தையும், சரக்கு போக்குவரத்து வழித்தடத்தையும் இணைத்து உருவாக்க வேண்டும். இது திருவொற்றியூர் எண்ணூர், மணலி, மாதவரம் பகுதி மக்களின் ஒருங்கிணைந்த விருப்பமும் ஆகும்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், எண்ணூர் காவல் உதவி ஆணை யர் வெங்கட்ராமன், கிராம ஒருங்கி ணைப்பு சங்கத் தலைவர் வி.கே.ஏழுமலை ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கிராம ஒருங்கிணைப்பு சங்கத்தின் நிர்வாகிகள் எம்.ரகுநாதன், வி.தியாக

ராஜன், எஸ்.டி.சங்கர், பி.வின்சென்ட் ராஜரத்தினம், எம்.கோபால், கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜி.வி.சுப்பிரமணியன், டி.ஆறுமுகம், எம்.கண்ணப்பன், சி.சடகோபன், சி.பாஸ்கர், ஏ.சசிதரன், வி.ஆர்.நடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிராம ஒருங்கிணைப்பு சங்கச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்புரையாற்றா. கூட்டமைப்பு இணைச் செயலாளர் பி.நிரஞ்சன் பட்நாயக் நன்றி கூறினார். பட்டிமன்ற பேச்சாளர் தமிழ் நெஞ்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கிராம ஒருங்கிணைப்பு சங்கத்தின் சார்பில் திருசங்கு, கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.கதிர்வேல், ஏ.அப்துல் வாகித், ஆர்.கருணாநிதி ஆகியோர் கோரிக்கைகளை முன்மொழிந்து பேசினர்.

தீர்மானஙகள்

பக்கிங்காம் கால்வாய் கரையை இரண்டு பக்கமும் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்த வேண்டும். ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை கால்வாயில் விடாமல் தடுக்க வேண்டும். எண்ணூர் முகத்துவாரப் பகுதியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தி கொசஸ்தலை ஆற்று நீர் கடலில் தடையின்றி கலப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மழைநீர் கால்வாய்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை முகத்துவாரப் பகுதியில் வராமல் தடுக்க வேண்டும். மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை வசதி இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் - பாதாள சாக்கடை இணைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தினசரி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.மணலி விரைவு சாலையில் பராமரிப்பு சாலை அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், முல்லை நகர் பகுதிகளில் சிக்னல் அமைக்க வேண்டும். எம்.எப்.எல். முதல் கடற்கரை சாலை வரை மேம்பால சாலை அமைக்க வேண்டும். எண்ணூர் திருவொற்றியூர் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அனைத்து பகுதிகளிலும் உயர்நிலை மின் கம்பிகளை புதைவட மின் இணைப்பாக மாற்றப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மையங்கள் பரவலாக்கப்பட வேண்டும். எரி உலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரநிர்ணய சட்டத்தை மீறும் ரசாயன தொழிற்சாலைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கோரமண்டல் இன்டெக்ஸ், எம்எஃப்எல், சிபிசிஎல் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர் கவனம் செலுத்தி பகுதி வாழ் மக்களுக்கு மாசு பாதிப்பற்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வு மையங்களில் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எர்ணாவூர் டாக்டர் அம்பேத்கர் மாநகராட்சி விளையாட்டு திடலை மேம்படுத்தி அங்கு கால்பந்து, கைப்பந்து, மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டு அரங்கங்களை உருவாக்க வேண்டும். பேசின் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தை அரசு விளையாட்டு மைதானமாக அமைக்க வேண்டும். திருவொற்றியூர் - எண்ணூர் பகுதிகளில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.