விளையாடு
19 Jul 2026, 10:03 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

60 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கோல் மழையுடன் வெண்கலம் வென்ற இங்கிலாந்து

வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வந்த 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் திங்களன்று அதிகாலை நிறைவு பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் 3ஆவது இடத்திற்கான ஆட்டம் ஞாயி றன்று அதிகாலை நடைபெற்றது. அமெரிக்காவின் மியாமி நகரில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின.

இங்கிலாந்து மிரட்டல்

ஆட்டத்தின் 2ஆவது நிமிடம் முதலே இங்கிலாந்து அணி கோல டிக்க ஆதிக்கம் செலுத்த தொடங்கி யது. 3ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் டெக்லான் ரைஸ் பெனால்டி பாக்ஸ் வெளியே அதிரடி கோல் விளாசினார். தொடர்ந்து ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோன்ஸா கார்னர் கிக் வாய்ப்பில் தலையால் முட்டி கோலடித்தார். இது யதார்த்தமாக அடிக்கப்பட்ட கோலாகும். அடுத்த 19 நிமிட இடைவெளியில் இங்கிலாந்து வீரர் சாகோ (37’) கோல டித்தார். இது கடுமையான போராட்டத் திற்கு இடையே அடிக்கப்பட்ட கோலா கும். எனினும் பிரான்ஸ் கோல் கீப்பர் மைக்னான் செய்த தவறால்தான் இங்கி லாந்து அணிக்கு இந்த கோல் கிடைத்தது என்று கூட கூறலாம். முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் சாகோ மீண்டும் ஒரு கோலடித்தார். 45+1’ நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ் அருகே சாகோ இந்த கோலை அடித் தார். இதன்மூலம் முதல்பாதியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் பிரம்மாண்ட முன்னிலைபெற்றது.

பிரான்ஸ் பதிலடி

இங்கிலாந்து அணியின் கோல் மழைக்கு இரண்டாம் பாதியின் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி பதி லடி கொடுக்க ஆரம்பித்தது. ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கேப்டன் மாப்பே கோல டித்தார். தொடர்ந்து 54ஆவது நிமி டத்தில் பிரான்ஸ் வீரர் பர்கோலா அதி ரடி கோலடித்தார். இது 140 கி.மீ., வேகத்திற்கும் அதிகமான அளவில் அடிக்கப்பட்ட அதிரடி கோலாகும். 66ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் மாப்பே மீண்டும் கோலடித்தார். ஆனால் பிரான்ஸ் அணியின் பதிலடி கோல் மழையை 85ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மூலம் இங்கிலாந்து தடுத்து நிறுத்தியது. இந்த பெனால்டி வாய்ப்பில் (87’) சாகோ கோலடித்தார். இது அவ ருக்கு ஹாட்ரிக் கோலாகும். ஆட்ட நேர உதிரி நிமிடத்தில் (90+6’) பிரான்ஸ் நாட்டின் முன்னணி வீரர் டெம்பேலே கோலடித்தார். இதற்கு பதிலடியாக அடுத்த 2 நிமிடங்களில் இங்கிலாந்து நாட்டின் நட்சத்திர வீரர் ஜுடே பெல்லிங்கம் (90+8’) கோலடித்தார்.

அணிக்கு முதல் வெண்கலப் பதக்கம்

இறுதியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இது இங்கிலாந்து அணிக்கு முதல் வெண்கலப்பதக்கம் ஆகும். குறிப்பாக 1966ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற பின், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து உலகக்கோப்பை அரங்கில் பதக்கம் வெல்கிறது. 1990 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்து அணி 4ஆவது இடத்தை பிடித்து இருந்தது. 3ஆவது முறையாக (ஏற்கெனவே 1958, 1986) வெண்கலப் பதக்கம் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பிரான்ஸ் அணி 2ஆவது முறையாக 4ஆவது இடத்தை பிடித்துள்ளது (ஏற்கெனவே 1982) என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் வீரர் மாப்பே உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதி ரான 3ஆவது இடத்திற்கான போட்டியில் 2 கோல்களை அடி த்ததன் மூலம், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 22 ஆக உயர்த்தியுள்ளார் பிரான்ஸ் கேப்டன் மாப்பே. இதன்மூலம் 21 கோல்களுடன் முதலிடத்தில் இருந்த அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி யைப் பின்னுக்குத் தள்ளி, உல கக்கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்த வீரர் என்ற சாதனையை மாப்பே படைத்தார் (3ஆவது இடத்திற்கான ஆட்டம் வரை மட்டுமே - இறுதிப்போட்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை).

திருத்தம்

ஞாயிறன்று வெளியான தீக்கதிர் விளையாட்டுச் செய்தி பிரிவில், இங்கிலாந்து - பிரான்ஸ் அணி களுக்கு இடையேயான 3ஆவது இடத்திற்கான போட்டியை கணக்கில் கொள்ளாமல் மெஸ்ஸிக்கு தங்க காலணி என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னதாக, நடைபெற்ற 3ஆவது இடத்திற்கான ஆட்டத்தின் முடி வில் மாப்பே அடித்துள்ள கோல் களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்து ள்ளது. அதாவது இறுதிப்போட்டிக்கு முன்னதாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரருக்கான ‘கோல்டன் பூட்’ (தங்க காலணி) விருதைப் பெறுவதில் மெஸ்ஸியை (8 கோல்கள்) விட முன்னிலையில் இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 8 கோல்கள் அடித்து மாப்பே கோல்டன் பூட் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

68 ஆண்டுகளில் இல்லாத வகையில் கோல் மழை

உலகக்கோப்பை தொடரில் பொதுவாக மூன்றாவது இடத்திற்கான போட்டி, எந்தவொரு அணியும் விளையாட விரும்பாத ஒரு போட்டியாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் அதற்கு விதிவிலக்கல்ல என்று பயிற்சியாளர்கள் கருதியிருந்தனர். ஆனால், ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் தற்காப்பிற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கோலடிக்க அதிரடியாக விளையாடியதால், இங்கிலாந்து - பிரான்ஸ் ஆட்டம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே காணாத வகையில் சாதனைகளைப் படைக்கும் ஒரு போட்டியாக மாறியது.

ஒட்டுமொத்தமாக 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்தத் திரில்லர் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. குறிப்பாக 68 ஆண்டுகளில் இல்லாத வகையில், உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போட்டி பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1954 மற்றும் 1958இல் தலா 9 கோல்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

பெல்லிங்காம் புதிய வரலாறு

இந்தப் போட்டியின் 90+8’ ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் மைக்னானை ஏமாற்றி இங்கிலாந்து நட்சத்திர வீரர் பெல்லிங்காம் கோலடித்தார். இந்த கோலின் மூலம், ஒரே உலகக்கோப்பை தொடரில் 7 கோல்களை அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெல்லிங்காம் பெற்றுள்ளார். குறிப்பாக, இங்கிலாந்து கேப்டன் ஹாரி மற்றும் கோல்கீப்பர் பிக்போர்டு உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது. இதனால் இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி எளிதாக வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இங்கிலாந்து அணியின் இளம்படை வரலாற்று கோல்மழையுடன் பிரான்ஸ் அணியை புரட்டியெடுத்து கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றது.