பொறியாளர் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
29 Jan 2026, 5:39 pm
<p><strong>பொறியாளர் கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கடலூர், ஜன. 29- ஒன்றிய அரசுக்கு இணையான ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொறியாளர் கூட்டமைப்பு சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களுக்கு 6வது ஊதிய குழுவின் போது முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் வழங்கப்பட்ட ஊதிய விகிதங்களை உறுதிப்படுத்த வேண்டும், அதன் அடிப்படையில் 7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் கூட்டமைப்பு நிர்வாகி செல்வம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர்கள் சுரேஷ், கிருஷ்ணகுமார், இரத்தின குமார், வேளாண்துறை பொறியாளர்கள் சசி குமார், ஞானசேகரன், சிவப்பிரகாசம், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கனகராஜ், வெற்றி வேல் கீதா, ரமேஷ், நீர்வளத்துறை செயற்பொறி யாளர்கள் மணிவேல், வீரமணி, ராஜராஜன் மற்றும் மோகன் குமார் உள்ளிட்ட 19 துறைகளை சார்ந்த பொறியாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர்.</p>
