முந்தய பக்கம்

ஆருத்ரா கோல்டு மோசடி 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

26 Nov 2025, 3:40 pm
ஆருத்ரா கோல்டு மோசடி 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
<p><strong>ஆருத்ரா கோல்டு மோசடி 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை</strong></p> <p>சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 இடங்க ளில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை மேற் கொண்டு வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி &nbsp;சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி &nbsp;வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த &nbsp;குற்றச்சாட்டு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவனத்துடன் தொடர் புடைய பாஸ்கர், மோகன்குமார், செந்தில் குமார், மைக்கேல் ராஜ், ஹரி, கூடுதல் இயக்குநர்களான மாலதி, &nbsp;செந்தாமரை, நாகராஜ், பேச்சிமுத்துராஜா, உதயகுமார், &nbsp;அசோக்குமார் ராஜா உள்ளிட்டோரும், அந்நிறுவனத்தின் &nbsp;உரிமையாளர்களில் ஒருவரான ராஜசேகர் என்பவரை யும் துபாயில் கைது செய்துள்ளனர். மோசடி செய்த பணம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத் &nbsp;துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தகவல் &nbsp;தெரிய வந்துள்ளது. வேளச்சேரி அருகே உள்ள மடிப்பாக் கத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் களில் ஒருவரான மோகன்பாபுவின் வீட்டிலும் சோதனை &nbsp;நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram