தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Dec 2025, 4:39 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமலாக்கத் துறை மீண்டும்  கடிதம்: முதல்வர் பதிலடி

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார்  தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும்  டிஜிபிக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் அனுப்பி யுள்ளது. அதில், அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள்  மூலம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூ லித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், எதிரிகள்  மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்களுக்கு எதிராகப் பயன் படுத்தி தினமும் பொய்களைப் பரப்பி வருவதாகவும், இதை  எதிர்கொள்ள கட்சியினர் தங்கள் பலத்தை சரியாகப் பயன் படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு

சென்னை: சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 2022 ஏப்ரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இம்மசோ தாவில் ஆளுநர் கோரிய நான்கு மாற்றங்கள் நிராகரிக்கப் பட்டு, கடந்த அக்டோபரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. மூன்று ஆண்டுகள் நிலுவையில் இருந்த இம்மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது.

காவலரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது

தருமபுரி: தருமபுரி பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே புதிதாகத் திறக்கப்பட்ட மனமகிழ் மன்றம் என்ற மது பான பாரை அகற்றக் கோரி தவெகவினர் நடத்திய போராட் டத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது தவெகவினர் மதுபானக்  கடையின் நுழைவாயிலில் கயிறு கட்டி காவல்துறையி னரை மீறி உள்ளே நுழைந்தனர். இதையடுத்து ஏற்பட்ட  தள்ளுமுள்ளுவில் தவெக தொண்டர் ஒருவர் காவலரின் கையைக் கடித்த சம்பவம் வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்தில் ஜெமினி என்பவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாலக்கோடு காவல்துறை தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையில் தளர்வு புதுதில்லி: பண மோசடி வழக்கில் விசாரிக்கப்படும்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு அளித்துள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் வாரம் இருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 31 முறைக்கும் மேல் ஆஜரான செந்தில் பாலாஜி, நிபந்தனையைத் தளர்த்தக் கோரி மனுத்  தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலை மையிலான அமர்வு, தேவைப்படும் பட்சத்தில் மட்டும் நோட்டீஸ் அளித்து ஆஜராக உத்தரவிடலாம் என்று தீர்ப்ப ளித்துள்ளது.

டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு கார ணமாக டிச.14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்க ளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்  கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாக வானிலை நிபுணர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நெற்பயிர்கள்  பாதிப்பு: கணக்கெடுப்பு பணி தீவிரம்

சென்னை: டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையினால் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து சம்பா மற்றும்  தாளடி பயிர்கள் அழுகி சேதமடைந்தன. பாதிக்கப் பட்ட விவசாயிகள் யாரும் விடுபடாத அளவிற்கு கணக்கெடுப்பு பணி நடத்தி டிச.12 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் துணை இயக்கு நர் தெரிவித்துள்ளார். சென்னை வேளாண்மை துணை இயக்குநர்  அறவாழி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர், மாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரடியாகப் பார்வையிட்டு சேத விபர கணக் கெடுப்பு பணியை ஆய்வு செய்தார். 59 வேளாண்மை  உதவி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறினார். திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரம் ஹெக்டேர்  பரப்பளவில் பாதிப்பு இருப்பதால், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து உதவி வேளாண் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டு கணக் கெடுப்பு பணி நடத்தப்படுவதாகவும், விவசாயி களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் வேளாண் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு அமைப்பு

சென்னை: யானை களை இடமாற்றம் செய் யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழி காட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு  நிபுணர் குழுவை அமைத் துள்ளது. கடந்த சில மாதங்களில் இரண்டு காட்டு யானைகள் இட மாற்றத்தின் போது உயிரி ழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அ. உதயன் தலைமையி லான ஆறு உறுப்பினர் கள் கொண்ட இக்குழு, யானைகளைப் பிடித்தல்,  கையாளுதல், இடமாற்றம்  செய்தல் மற்றும் கண்கா ணித்தல் தொடர்பான அறிவியல் அடிப்படையி லான நெறிமுறைகளை உருவாக்கும். குழு 2 மாதங் களுக்குள் தனது அறிக் கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.