தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் கேரள முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

1 Dec 2025, 3:45 pm
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் கேரள முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
<p><strong>நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் கேரள முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்</strong></p> <p>பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் ஒரு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டால், அந்த மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை அல்லது சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் பொய் அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கு களுடன் விசாரணைக்கான சம்மன் அல்லது விளக்க நோட்டீஸ் அனுப்புவது வழக்கம். ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமை யிலான மோடி அரசு இந்த சதித்திட் டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் இடது ஜன நாயக முன்னணி ஆட்சி செய்து வரும் கேரளாவில் அடுத்த ஆண்டு (2026 - ஏப்ரல் அல்லது மே) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்த லையொட்டி கேரள முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. &nbsp;கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கேஐஐஎப்பி - KIIFB) &nbsp;வழங்கிய மசாலா பத்திரத்துடன் தொடர்பு டைய அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறல்கள் தொடர்பாக, முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பினராயி விஜயனுக்கு மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக், கேஐஐஎப்பி தலைமை நிர்வாக அதிகாரி கே.எம்.ஆபிரகாம் ஆகியோ ருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியல் விளையாட்டு : சிபிஎம் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறுகையில், &ldquo;கேரள முதல மைச்சர் பினராயி விஜயனுக்கு அம லாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது ஒரு அரசியல் விளையாட்டு. &nbsp;கேரள தேர்தல்களுடன் அமலாக் கத்துறை நோட்டீஸ்களும் ஒத்துப்போ கின்றன. 2020 உள்ளாட்சித் தேர்தல்கள், 2020 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களின் போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அறிவிப்பு களை வெளியிட்டது&rdquo; என அவர் குற்றம் சாட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.