முந்தய பக்கம்

அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

6 Mar 2026, 2:41 pm
அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
<p><strong>அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை</strong></p> <p>பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலை யன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெக் ஆகிய நிறுவனங்கள் வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் (ரூ.14,000 கோடி முதல் ரூ17,000 கோடி வரை) திருப்பிச் செலுத்த வில்லை. இந்த வங்கி மோசடி மற்றும் வெளிநாட்டு செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குத் தொடர்பாக வெள்ளியன்று அனில் அம்பானியின் குழும நிறுவனங்களில் அம லாக்கத்துறை சோதனை நடத்தியது. &nbsp;மும்பை மற்றும் ஹைதராபாத் என இரு நகரங்களிலும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மற்றும் அதன் உயர் அதி காரிகளுடன் தொடர்புடைய சுமார் 10 முதல் 12 இடங்களில் சோதனைகள் நடை பெற்றன. அமலாக்கத்துறையின் 15 குழுக்கள் இந்த சோதனை நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram