தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அழிவின் விளிம்பில் உள்ள இயல் மீன்கள்

28 Mar 2026, 4:13 pm
அழிவின் விளிம்பில் உள்ள இயல் மீன்கள்
<p><strong>அழிவின் விளிம்பில் உள்ள இயல் மீன்கள்</strong></p> <p>மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நன்னீர் உயிர்ச்சூழல் மிகப்பெரிய மாற்றத்தையும் ஆபத்தையும் எதிர்கொண்டு வருவதை வெளிப்படுத்துகின்றன. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆய்வுகள், வைகை ஆற்றையும் அதன் வடிநிலப் பகுதிகளையும் மையமாகக் கொண்டு, நன்னீர் மீன்களின் நிலையை ஆவணப்படுத்தி வருகின்றன. ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் போன்ற நன்னீர் வளங் கள், உயிரியல் சமநிலையின் அடிப் படைத் தளங்களாகும். இவற்றில் வாழும் நன்னீர் மீன்கள், உணவுச் சங்கிலியின் முக்கிய இணைப்பாக இருந்து, கொசுவின் இளம்புழுக்களை உண்டு நோய் பரவலை கட்டுப்படுத் துவதோடு, நீரின் தரத்தையும் வெளிப் படுத்தும் குறியீட்டு உயிரினங்க ளாகவும் திகழ்கின்றன. தமிழகத்தின் பாரம்பரிய வாழ்க் கை முறையிலும், பண்பாட்டிலும் மீன்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாண்டியர்களின் இரட்டை மீன் சின்னம் &nbsp;முதல் கீழடி அகழாய்வுகளில் கண்டெ டுக்கப்பட்ட மீன் குறியீடுகள் வரை, நமது நாகரிகம் நீர்நிலைகளையும், மீன்க ளையும் மையமாகக் கொண்டிருந் ததை வரலாறு உறுதிப்படுத்துகிறது. அழிவின் விளிம்பில் இயல் மீன்கள் ஆனால், உலகமயமாதல் மற்றும் நகரமயமாதலின் தாக்கத்தால், நன்னீர் வளங்கள் கடுமையாக மாசடைந்து வருகின்றன. தொழிற்சாலைக் கழிவு கள், சாயப்பட்டறைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் போன்றவை ஆறுகள் மற்றும் கண்மாய்களை பாதித்து, இயற் கை வாழிடங்களைச் சீர்குலைக் கின்றன. இதன் விளைவாக, இயல் பாக வளர்ந்த ஆரா, வெளிச்சி, கெண் டை, கெளிறு (கெளுத்தி) போன்ற பல நன்னீர் மீன்கள் தற்போது அரிதாகவோ அல்லது முற்றிலும் காணாமல் போன வையாகவோ மாறியுள்ளன. மேலும், ஆற்றுப்படுகைகளில் இருந்த மண்வளம் குறைந்திருப்பதும், அணைகள் கட்டப்பட்டதால் மீன்களின் இனப்பெருக்கப் பயணம் பாதிக்கப்பட் டிருப்பதும், இந்த அழிவை மேலும் வேகப்படுத்துகின்றன. அயல் மீன்களின் ஆக்கிரமிப்பு உணவுத் தேவையை முன்னிட்டு திலேபியா (ஜிலேபி கெண்டை), கட்லா போன்ற அயல் மீன்கள் நன்னீர் வளங் களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை இயல் மீன்களுடன் உணவு மற்றும் வாழிடம் தொடர்பாக போட்டி யிட்டு, சில சமயங்களில் அவற்றை முற்றிலும் அழிக்கும் நிலைக்குச் செல் கின்றன. இன்றைக்கு பல இடங்களில் பண் ணை வளர்ப்பு முறையில் இந்த அயல் மீன்கள் ஊசிகள் மூலம் வேகமாக வளர்க்கப்பட்டு, இயற்கைக்கு மாறான உணவுகளால் பெரிதாக்கப்பட்டு விற்ப னை செய்யப்படுகின்றன. இது நீர்நிலை களின் இயற்கை சமநிலையை கடுமை யாக பாதிக்கிறது. நம்பிக்கையின் ஒளி இத்தகைய சூழலில், மதுரை மாவட் டம் மேலூர் வட்டம் மருதூர் கண்மா யில் &ldquo;பறவைக் கெண்டை&rdquo; என அழைக் கப்படும் ரைனோமுகில் கோர்சுலா மீன் &nbsp;மீண்டும் காணக்கிடைத்துள்ளது குறிப் பிடத்தக்கது. 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆவணப்படுத்தப்பட்ட இந்த இனத் தின் மீள்காணல், இன்னும் நன்னீர் உயிர்ச்சூழலில் உயிர்ப்புள்ள பகுதிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த மீனின் தனிச்சிறப்பு, அதன் கண்கள் நீரின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை ஒரே நேரத்தில் காணும் வகையில் அமைந்திருப்பது. இதனால், இது தன்னைக் காக்கவும், உணவை தேடவும் சிறப்பாகத் தகவமைத் துள்ளது. ஆய்வுகள் சொல்வது என்ன? 2024ஆம் ஆண்டு வைகை ஆய்வில் 62 வகையான நன்னீர் மீன்கள் பதிவாகி யுள்ளன. அதில் 11 அயல் மீன்கள். மேலும், 19 பழைய இனங்கள் தற்போது காணப்படவில்லை. இதன் மூலம், இயல் மீன்கள் வேகமாக அழிந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவசரத் தேவையாகும் பாதுகாப்பு நன்னீர் மீன்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களை பாதுகாக்க இதுவரை போதுமான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை. இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. எனவே, நீர்நிலைகளில் மாசு கட்டுப்பாடு. அயல் மீன் இனங்கள் மீது கட்டுப்பாடு. இயல் மீன்களின் பாதுகாப்பு திட்டங்கள். அறிவியல் ஆய்வுகளின் விரிவாக்கம். போன்ற நடவடிக்கைகள் அவசர மாக மேற்கொள்ளப்பட வேண்டும். நமது நாகரிகம் நதிக்கரையை மைய மாகக் கொண்டு வளர்ந்தது. மீன் என்பது உணவாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு சின்னமாகவும் இருந்துள்ளது. அந்த அடையாளத்தை காக்க, ஆறுகளை யும், கண்மாய்களையும், நன்னீர் உயிர் சூழலையும் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமையாகும். அரசு மட்டுமல்ல, நீர்நிலைகளை சார்ந்து வாழும் மக்களும், பொது மக்களும் இணைந்து செயல்பட்டால் தான் இந்த இயற்கைச் செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்க முடியும். * தொகுப்பு: ஜெ.பொன்மாறன்</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.