கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
18 Nov 2025, 3:21 pm

திருப்பூர் காங்கேயம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர், நவ. 18 - திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட காங்கேயம் சாலை இந்நகரின் பிரதானமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. சாலையில் தங்களது கடையின் விளம்பர பலகை மற்றும் பொருட்களை வைத்து கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய் துள்ளனர். இதன் காரணமாக இந்த சாலையின் அகலம் சுருங் கிப் போய், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினர் பலமுறை அறிவிப்பு கொடுத்தும் ஆக்கிர மிப்புகளை அகற்றாத நிலையில் செவ்வாயன்று அதிகாரிகள் திடீரென களமிறங்கி ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரத் தின் உதவியுடன் அகற்றினர். இதில் கடைகள் முன்பாக போடப்பட்டிருந்த நிழல் கூரை கள் மற்றும் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த ஷெட் கடைகள் என முற்றிலுமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கையாக தங்களுக்கு தெரிவித்தி ருந்தால் பொருட்களை நாங்களே அகற்றி இருப்போம். தற் போது அனைத்து பொருட்களும் அகற்றப்படுவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வியா பாரிகள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப் பினும் அதிகாரிகள் பலமுறை முன்னெச்சரிக்கை அறிவிப்பு கள் கொடுக்கப்பட்டதாக கூறி போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட்டது.

தை 1 பொங்கல் விழாவை சிறப்பாக நடத்த நொய்யல் பண்பாட்டு அமைப்பு முடிவு

திருப்பூர், நவ. 18 - திருப்பூரில் நொய்யல் பண்பாட்டு அமைப்பின் ஆலோ சனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நொய்யல் பண்பாட்டு அமைப்பின் தலைவர் மு.ஜீவானந்தம் தலைமை ஏற்றார். இந்த கூட்டத்தில் வரும் தை முதல் நாள் (ஜனவரி 15) திருப்பூர் பொங்கல் திருவிழாவை பிரம்மாண்ட மான கலை நிகழ்ச்சிகளோடு நொய்யல் நதிக்கரையில் சிறப் பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர், மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்து டன் கலந்து பேசி நிகழ்வுகளை இறுதிப்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செய லாளர் ஆர்.ஈஸ்வரன், துணைத் தலைவர்கள் மோகன் கே. கார்த்திக், வே.முத்துராமவிங்கம், பி.ஆர்.நடராஜன், பொரு ளாளர் மு.திருப்பதி, பாரதி சுப்பராயன், வீரபாண்டி குமார், ஆசிரியர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆதார் மையங்களை அதிகப்படுத்த கோரிக்கை

உடுமலை,நவ.18- ஆதார் சேவை மையங்களை அதிகப்ப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஒன்றிய மோடி அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் பொது மக்கள் தினமும் எதாவது ஒரு அடையாள அட்டையை நகல் எடுப்பது அல்லது அதில் திருத்தம் செய்வது என்று எதா வது ஒரு உத்தரவுகளை போட்டு வருகி றது. இந்நிலையில் தற்பொழுது தீவிர வாக்கா ளர் படிவம் திருத்தம் நடைபெற்று வரும் நிலை யில் வாக்காளர் குறித்த படிவத்தை நிரப்ப ஆதார் எண் தேவை படுவதால் வேலைக்காக வெளியூர் சென்றுவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்து உள்ளதை தற்பொழுது வாக்கு உள்ள இடத் திற்கு முகவரியை மாற்றம் செய்ய அதிகமாக வருகிறார்கள் மற்றும் குழந்தைகளின் ஆதார் புதுப்பிப்பு என்பது உள்ளிட்ட வேலைக ளுக்கு ஆதார் எண் கேட்கப்படும் நிலையில் உடுமலை வட்டாச்சியர் அலுவலக வளாகத் தில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த மையத்தில் குறைந்த அளவிலான பணியாளர்களே உள்ள நிலையில் தினமும் நூற்றுக்கான பொது மக்கள் வருவதால் அனைவரும் பயன் படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து அனைவருக்கும் சேவை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை

திருப்பூர், நவ. 18 - திருப்பூரில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வா யன்று காலை தலையில் கல்லை போட்டு ஒரு வர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்த பொது மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். இதையடுத்து துணை ஆணையர் கௌதம், உதவி ஆணையர் பிர தீப் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள் அப்பகுதியில் இருக் கும் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.