வாலாஜாவில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: விவசாயிகள் பாதிப்பு!
29 Nov 2025, 4:58 pm
<p><strong>வாலாஜாவில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: விவசாயிகள் பாதிப்பு!</strong></p>
<p>ராணிப்பேட்டை, நவ.29- வாலாஜா ஊராட்சி ஒன்றியம் திருமலைச்சேரி ஊராட்சியில் பொது வழிப்பாதையை ஊராட்சி எழுத்தர் பாலாஜி ஆக்கிர மித்துள்ளதால் விவசாயி கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் விவசாயப் பணிகளுக்கு கால்நடைகள், விவசாய பொருட்கள், இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகளுக்கு வழியை மீட்டுத்தர ஊராட்சி நிர்வாகம், மாவட்ட வரு வாய் துறை, பொதுப் பணித்துறை, நீர்வள துறை, காவல்துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தளவாய் பட்டறை, மோசூர், களத்தூர், ஈடிகைகண்டை, காந்திநகர், தாமரைப்பக்கம் கிராமங்களில் பொது வழிப்பாதை, நீர்வழிப் பாதை, ஓடைகள், கரை களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற திங்கள் மனு முதல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரை மாவட்ட ஆட்சியருக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. போதிய நில அளவை யர்கள் இல்லை என காரணம் கூறி நட வடிக்கை எடுக்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உரிய நியாயமான தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்சி.மணி கோரிக்கை வைத்துள்ளார்.</p>
