தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவது கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம்

17 Dec 2025, 1:28 pm
பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவது கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம்
<p>பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவது கண்டனத்திற்குரியது என சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.<br /> நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.<br /> அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என அவர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.