தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுக!

21 Aug 2026, 9:37 pm
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுக!

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுக! கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று பெ. சண்முகம் வலியுறுத்தல்

சேலம், ஆக. 21—சாதி ஆணவப் படுகொலை களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி சார்பில் சேலத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசினார்.

குடியரசுத் தலைவரிடம் மனு

பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இந்தக்கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. திரட்டப்படும் கையெழுத்துகள் இந்தியக் குடியரசுத் தலைவரிடம்ஒப்படைக்கவுள்ளனர் என்று சண்முகம் தெரிவித்தார்.

பாஷா ஆணையம் பரிந்துரை வழங்கட்டும்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் நீதிபதி கே.என். பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம், கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் உள்ளிட்ட பலஅமைப்புகள் தனிச் சட்டத்திற்கான மாதிரி வடிவத்தை நேரடியாக வழங்கியுள்ளன. எனவே தாமதமின்றி பாஷா ஆணையம் தமிழ்நாடுஅரசுக்குத் தனது பரிந்துரையை வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.

காலிப் பணியிடங்களை நிரப்புக!

இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், அரசுப் பணிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால்அதன் பலன்கள் முழுமையாகப் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்றார். தவெக அரசு தாக்கல் செய்தபட்ஜெட்டில், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை; இதனால் பணிச்சுமையால் அரசு ஊழியர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்பினால் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்சுட்டிக்காட்டினார்.

செருப்பணிந்து நடக்க முடியாத, சுடுகாட்டுக்குப் பாதையோ சுடுகாடோ இல்லாத நிலை உள்ளிட்ட, தவிர்க்கமுடியாத முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தே இந்த இயக்கம் நடத்தப்படுவதாகவும், சமூகத்தின் அனைத்துப்பிரிவினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பங்கேற்றோர்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்டச் செயலாளர் வீ. இளங்கோ, மாவட்டத்தலைவர் ஆர். குழந்தைவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என். பிரவீன் குமார்,எஸ்.எம். தேவி, ஏ. கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.