தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் இ.எம்.எஸ்.ராதா காலமானார்

22 Nov 2026, 9:18 pm
தோழர் இ.எம்.எஸ்.ராதா காலமானார்

தோழர் இ.எம்.எஸ்.ராதா காலமானார்

திருவனந்தபுரம்கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சருமான மறைந்த தோழர் இ.எம்.எஸ். அவர்களின் மகள் ராதா ஞாயிறன்று காலமானார். அவருக்கு வயது 70இ.எம்.எஸ். - ஆர்யா அந்தர் ஜனம் தம்பதியின் மகளான ராதா, கேரள மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும்,‘தேசாபிமானி’ நாளிதழின் நிர்வாக மேலாளராகவும் பணியாற்றியவர். திருவனந்தபுரம் வழுதக்காடு காட்டன் ஹில் ஹைட்ஸ் பகுதியில் அவர் வசித்து வந்தார்.

‘இ.எம்.எஸ். - ஒரு மகளின் நினைவுகள்’

அரசியல், சமூக மற்றும் கலாச் சாரத் தளங்களில் தீவிரமாக இயங்கி வந்த ராதா, தனது எழுத்து, பொதுச் சேவைகள் மூலம் தனி முத்திரை பதித்தவர். தனது தந்தை இ.எம்.எஸ். குறித்த நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் ‘இ.எம்.எஸ் -ஒரு மகளின் நினைவுகள்’ (EMS - Memories of a Daughter) என்ற நூலை அவர் எழுதியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழான ‘தேசாபிமானி’ நாளிதழுடன் நீண்டகாலத் தொடர்பு கொண்டிருந்த இவர், 1988-ஆம் ஆண்டு அந்நாளிதழில் எழுத்தராகப்பணியில் சேர்ந்தார். தொடர்ந்து விநியோக உதவி மேலாளர், காசாளர் மற்றும் கொள்முதல் துறை உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர்,2012ஆம் ஆண்டு நிர்வாக மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ‘தேசாபிமானி’ நிர்வாகத் துறையில் மட்டும்சுமார் 24 ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார்.

மூத்த குடிமக்கள் ஆணையம்

தனது தொழில்முறைப் பணிகளுடன் பொதுவாழ்விலும் ராதா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மகளிர் ஆணையம், மூத்த குடிமக்கள் ஆணையம்ஆகியவற்றின் மூலம் பெண்கள், முதியோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர் பான பொது முயற்சிகளில் பங்கேற் றார். மேலும், எழுத்தாளராகவும், சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளிலும் தொடர்ந்து இயங்கி வந் தார்.சமீபகாலமாகப் புற்றுநோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டு மறைந்த தோழர் ராதாவுக்குத் திருவிதாங் கூர் தேவசம் போர்டின் தலைவராகப் பணியாற்றிய சி.கே. குப்தா என்ற கணவரும், சித்தார்த் குப்தா என்ற மகனும், ஸ்நேகபிரியா என்ற மருமகளும் உள்ளனர். திங்களன்று ராதாவின் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

பினராயி விஜயன் இரங்கல்

தோழர் ராதாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் உள் ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில், “இ.எம்.எஸ்.அவர்களின் மகளும், அரை நூற்றாண்டு காலமாக ‘தேசாபிமானி’ நாளிதழின் வலிமையான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவருமான ராதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத் தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுதியான அரசியல் தெளிவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் காக நீண்டகாலம் பணியாற்றிய வலிமையான தோழராக ராதா திகழ்ந்தார். ‘தேசாபிமானி’க்கு முன்பாக ‘சிந்தா’ இதழிலும் அவர் பணியாற்றியுள்ளார். பொதுவாழ் விலும் அவர் தீவிரமாக இயங்கி வந்தார். மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும், பின்னர் மூத்த குடிமக்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் ஏற்றுக்கொண்ட அனைத்துப் பொறுப்புகளிலும் தனக்கெனத்தனி முத்திரையைப் பதிக்க ராதாவால் முடிந்தது. ராதாவின் மறைவு இடதுசாரி இயக்கத் திற்கும் பொதுச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்புத் தோழரின் நினைவுகளுக்குமுன்னால் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது குடும்பத் தினர் மற்றும் சக ஊழியர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.