தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுவரோவியத் தொழிலாளர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு!

5 Mar 2026, 3:59 pm
சுவரோவியத் தொழிலாளர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு!

சுவரோவியத் தொழிலாளர்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு!

தேர்தல் திருவிழா துவங்கியது!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலை யில், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரப் பணிகளால் சுவரோவியத் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் புத்துயிர் பெற்றுள் ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறி விப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு போன்ற அரசியல் நகர்வுகள் ஒருபுறம் இருக்க, மாவட்ட அளவில் கட்சியின் சின் னங்களையும், வாக்குறுதிகளையும் மக்க ளிடம் கொண்டு சேர்க்கும் பணியில் நிர் வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அம லுக்கு வந்தால் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பதாகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப் படும். இதனால், நாமக்கல் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இப் போதே சுவர் விளம்பரங்கள் களைகட்டி யுள்ளன. மக்கள் அதிகம் நடமாடும் இடங் களை கண்டறிந்து, உரிமையாளர்களின் அனுமதியுடன் திமுக, அதிமுக, காங்கிரஸ்,  சிபிஎம் மற்றும் புதிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரங்களை வரைந்து வருகின்றன. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறு கையில், ”2026 தேர்தல் களம் பரபரப் பாக இருப்பதால், கடந்த சில மாதங்களா கவே வேலைவாய்ப்பு கணிசமாக அதிக ரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அதிகாலை சூரிய உதயத் திற்கு முன்பே பணிகளை தொடங்கி விடுகி றோம். காலை 11 மணி வரை வரைந்து விட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு மேல்  பணிகளை தொடர்கிறோம். புதிய கட்சிகளின் வருகையால் முன்பை விட இப்போது கூடுதல் அழைப்புகள் வருகின் றன” என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வழக்கமான நாட்களில் கட்டிடங்க ளுக்கு வர்ணம் பூசும் வேலைக்குச் செல் லும் இவர்களுக்கு, தேர்தல் காலம் ஒரு  வரப்பிரசாதமே. இருப்பினும், சில சிக்கல் களும் உள்ளன. அதில் ஒன்று, பேசிய  தொகையை உடனுக்குடன் கொடுத்து விட்டால் சிரமமில்லை. ஆனால், ஒரு சில கட்சியினர் தேர்தல் தேதி அறிவித்த பிறகு எங்களை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, தேர்தல் முடிவில் தோல்வி  அடைந்துவிட்டால், செய்த வேலைக்கான கூலியை பெறுவது பெரும் போராட்டமாகி விடுகிறது” எனத் தங்களின் ஆதங்கத்தை யும் பதிவு செய்கின்றனர். ஆயிரம் சவால்கள் இருந்தாலும், தேர் தல் திருவிழா தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாக நம்பிக்கையுடன் தெரி விக்கின்றனர் இந்த வண்ண தூரிகை கலைஞர்கள். -எம்.பிரபாகரன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.