பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முதலாளிகள் சங்கங்கள்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை காலம் கடத்தும் முதலாளிகள் சங்கங்கள்</strong></p>
<p>திருப்பூர், டிச. 6 – திருப்பூர் பனியன் தொழிலா ளர் சம்பள ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில், தொழிற்சங்கங் களின் கோரிக்கைகள் குறித்துப் பேசாமல், மேலும் காலம் கடத்தும் நோக்கத்தில் முதலாளிகள் சங்கங் கள் நடந்து கொள்கின்றன. திருப்பூர் பனியன் தொழிலா ளர்களுக்கு ஆரம்பத்தில் மூன் றாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இது, நான் காண்டுகளுக்கு ஒரு முறை என மாறியது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு போடப்பட்ட நான் காண்டு சம்பள உயர்வு ஒப்பந்தம் 2025 செப்டம்பர் 30 ஆம் தேதியு டன் காலாவதியானது. அதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் நிறை வேற்ற வேண்டும் என்று சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங் கள் கோரிக்கை விடுத்தன. எனினும் திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கம் (டிஇஏ), தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் டீமா, நிட்மா, டெக்மா உள்ளிட்ட ஆறு உற்பத்தி யாளர் சங்கங்கள் முன்கூட்டியே பேச்சுவார்த்தைக்கு முன்வர வில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தனித்தனியாக கோரிக்கைகள் கொடுத்த நிலை யில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்தன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் இப்பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன் டியுசி, ஏடிபி, எம்எல்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர் வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சங்கங்களிடம் தனித்தனியாக கொடுத்திருக்கும் கோரிக்கையை ஒருங்கிணைத்து ஒரே கோரிக்கை பட்டியலை வழங்கும்படி முதலாளி கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்ட னர். அதன்படி தொழிற்சங்கங்கள் கூடிப் பேசி ஒருங்கிணைந்த கோரிக் கைப் பட்டியலை உருவாக்கினர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் பணி யாற்றி வரும் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் 2025 அக் டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது பெற்று வரும் ஒப்பந்த சம்பளத்தில் இருந்து 120 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும், அகவிலைப்படி (பஞ்சப்படி) மாதம் ரூ.5 ஆயிரம், பயணப்படி ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஓவர்டைம் படி தற்போது வழங்குவதில் இருந்து நூறு சதவிகிதம் வழங்க வேண்டும், கல்வி உதவித் தொகை யாக பனியன் தொழிலாளர் குழந் தைகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.2500ம், 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.5 ஆயிரமும், உயர் கல்விக்கு ரூ.10ஆயிரமும் கல்வி யாண்டு தொடக்கத்தில் ஒரு குடும் பத்தில் 2 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும், இரு பால் பனியன் தொழிலாளர்களுக்கு திருமண உத வித் தொகை பணிக்காலத்தைக் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.10 ஆயி ரம் வீதம் வழங்க வேண்டும், குழுக் காப்பீடு, குடும்ப நல உதவித் தொகை, சுற்றுலா உதவித் தொகை, கூட்டுறவு கடன் சங்கம் உள்பட 16 அம்சக் கோரிக்கைகளை பட்டியலிட்டு முதலாளிகள் சங்கங் களுக்கு அனுப்பினர். இதன் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி வெள்ளி யன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க கட்டிடத்தில் இருதரப்புப் பேச் சுவார்த்தை நடைபெற்றது. இதில் கோரிக்கைகள் குறித்து தங்கள் சங் கங்களின் செயற்குழுவில் கலந்து பேசிவிட்டு மீண்டும் அழைப்பதா கத் தெரிவித்தனர். அதற்கு, ஏற்கெனவே கோரிக் கைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மீது தொழிற்சங்கங்கள் முன் வைக்கும் கருத்துகளைத் தெரிந்து கொண்டால் தானே, முதலாளிகள் சங்க செயற்குழுக்களில் தொழிற் சங்கங்களின் நிலைபாட்டைப் பற்றி தெரிவித்து விவாதிக்க முடியும்? மேலும் கடந்த காலங்களில் கோரிக் கைகள் குறித்து உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தப்படும். ஆனால் தற்போது கடந்த ஒப்பந்தம் முடிந்து மூன்று மாத காலம் ஆகியும் கோரிக் கைகள் மீது பேச்சுவார்த்தை நடத் தப்படவில்லை. செயற்குழுவில் பேசிவிட்டு அடுத்து பேசலாம் என் பது காலம் கடத்தும் அணுகுமுறை யாக உள்ளது என்று தொழிற்சங்கங் கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவித் துள்ளனர். இதையடுத்து ஜனவரி இரண் டாவது வாரத்தில் பேசலாம் என்று முதலாளிகள் தரப்பில் கூறியுள்ள னர். ஆனால் இது மிகவும் காலதாம தப்படுத்தும் நிலையாகும். எனவே அதற்கு முன்பாகவே பேச வேண் டும் என்று தொழிற்சங்கங்கள் வலி யுறுத்தின. இதன் பிறகு டிசம்பர் 26 ஆம் தேதி அடுத்த பேச்சுவார்த் தையை வைத்துக் கொள்ளலாம் என்று முதலாளிகள் சங்கங்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மூன்றா வது பேச்சுவார்த்தை டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று சிஐ டியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தெரி வித்தார். அத்துடன் பனியன் சங்கங்கள் கோரிக்கைகள் குறித்து 50 ஆயிரம் துண்டறிக்கைகள் அச்சிட்டு பனி யன் தொழிலாளர்களிடம் விநியோ கிப்பது என்று தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.</p>
<p> </p>
