பிடிஓவை தாக்க முயற்சி கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>பிடிஓவை தாக்க முயற்சி கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>விழுப்புரம், பிப்.16- விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றிய திமுக செயலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலைஞரின் கனவு இல்ல பயனாளிகள் தேர்வு தொடர்பாக விதிமுறைகளுக்கு மாறாக தவறான பயனாளிகளை சேர்க்க கோரி வல்லம் ஒன்றிய திமுக செய லாளர் சீ.அண்ணாதுரை என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.சிலம்பு செல்வனை அவதூறாக பேசி தாக்க முற்பட்டதை கண்டித்து வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் ஜெ.ஜெய்சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணை செயலாளர்ஆ.ஜா.பார்த்தீபன், வட்டார வளர்ச்சி அலு வலர் (கி.ஊ) கி.பிரபாசங்கர், மாநிலத் துணைத்தலைவர் கு.சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். வட்டார கிளை நிர்வாகிகள் சிவா னந்தம், கார்த்திக், உள்ளிட்ட வட்டார கிளை நிர்வாகிகள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துவேல், அமுதா, பச்சையப்பன், மாவட்ட தணிக்கையாளர் ப.திருவேங்கடம் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
