அவசர நிலைக் கொடுமையும் அர்த்தமற்ற பேச்சும்
8 Sept 2026, 9:03 pm

அவசர நிலைக் கொடுமையும் அர்த்தமற்ற பேச்சும்

அவசர நிலைக் காலம் என்பது விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் ஓர் இருண்ட காலமாகும். அந்த நாட்களில் ஜனநாயக தீபத்தை அணைந்து விடாமல் பாதுகாக்க நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறை, சித்திரவதை என்று பல்வேறு இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றனர். தமிழ்நாட்டில் ஏராளமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

அக்காலத்தில் இரட்டைத் தணிக்கை முறையை எதிர்கொண்டது தீக்கதிர் நாளேடு. வ்வொரு நாளும் இரண்டு முறை தணிக்கைக்குஉட்படுத்தப்பட்டதால் சில நாட்களில் தலையங்கம் வெளியிடுவது கூட சிக்கலானது. தொடர்ந்து தலையங்கம் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் “என்னத்த எழுத”என்று தலையங்கப் பகுதியில் எழுதிக் கொடுக்கஇதில் ஏதோ உள் அர்த்தம் உள்ளது என்று அதையும் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அவசர நிலைக்காலத்தின் போது தமிழ்நாட்டில் திமுகவின் முரசொலி ஏடும் இரட்டைத் தணிக்கை முறைக்கு உள்ளானது. ஏராளமான திமுகவினர் சிறையில்அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகினர். சென்னை மேயராக இருந்த சிட்டிபாபு சிறையில் நடந்த தாக்குதலால் உயிரிழந்தார். அப்போது மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். இது வரலாறு.

தமிழக சட்டப் பேரவையில் திங்களன்று காவல்துறை மானியக் கோரிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார்ஆகியோர் மிசா குறித்து பேசியிருப்பது முற்றிலும்அர்த்தமற்றது: அநாகரிகமானது மட்டுமல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போரில் ஈடுபட்டவர்களை இழிவுபடுத்துவதுமாகும். அதிலும் மிசா குறித்து பேசும்போது, முதல்வர் விஜய் செய்து காட்டிய உடல்மொழி எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போதுமுதல்வரின் பதிலுரை என்பது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாக இல்லை. மாறாக, சட்டமன்ற விவாதத்திற்கு தொடர்பில்லாதவற்றைப் பேசி திசைதிருப்பும் உத்தியாகவே இருந்தது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய துறையை கையில் வைத்துள்ள முதல்வர் பொறுப்பாக செயல்பட வேண்டும், பொறுப்பாக பேச வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ‘மாண்புமிகு’ என்பதுஅவையில் அதிகம் ஒலிக்கும் சொல். அவையும்மாண்புமிக்கதாக இருக்க வேண்டும் அல்லவா?

சட்டப் பேரவையில் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்கப்படுகிறது. அடக்கமுடைமை அதிகாரத்தில் வரும் “ஒன்றானுந் தீச்சொல் பொருட் பயன்உண்டாயின் நன்றாகாதாகி விடும்” என்ற குறளை அவையில் எழுதி வைக்கவேண்டும். ஒரு தீய சொல்லை பேசிவிட்டால்அது நன்மைகளுக்கு களங்கம் உண்டாக்கிவிடும் என்பது இதன் பொருள்.