தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எலான் மஸ்க்கும் அம்பானியும்! - அ. அன்வர் உசேன்

11 Oct 2026, 9:40 pm
எலான் மஸ்க்கும் அம்பானியும்! - அ. அன்வர் உசேன்

எலான் மஸ்க்கும் அம்பானியும்! - அ. அன்வர் உசேன்

தமது வணிகத்தை நிலை நிறுத்தக் கொள்ளை லாபத்தை உறுதிசெய்யவும் இந்தியப் பெரு முதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளுடன் கூடிக் குலவத் தவறுவதில்லை. எனினும் சில சமயங்களில் இவர்களிடையே முரண்பாடுகள் ஏற்படுவதும் உண்டு. அப்படிஒரு முரண்பாடு எலான் மஸ்க்குக்கும்,அம்பானி மற்றும் ஏர்டெல் சுனில் மிட்டலுக்கும் இடையே செயற்கைக் கோள் மூலம் இணைய வசதி தரும் பிரச்சினையில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.எலான் மஸ்க்கின் நோக்கம் இந்திய மக்களுக்குச் சிறந்த இணையவசதி தருவதல்ல; அம்பானி, மிட்டலுக்கும் இந்திய இறையாண்மையை பாதுகாப்பது நோக்கமல்ல. இரு பகுதியினருக்கும் சுமார் ரூ.90,000 கோடி மதிப்புள்ள பரந்த இந்திய இணையச் சந்தையை வளைத்துத் தமது லாபத்தைப் பெறுவது மட்டுமே நோக்கம்.இந்த முரண்பாட்டில் மோடி அரசாங்கம் அம்பானிக்கு ஆதரவாகச் செயல்படுவதில் வியப்பில்லை.

எலான் மஸ்க்கின் ஆத்திரம்

செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி தர தொழில்நுட்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யும் முனைப்பில் இந்திய அரசு உள்ளது; வழித்தடங்கள் எட்டாத உள்கிரா மங்களுக்குக் கூட இதன் மூலம் இணைய வசதி தர இயலும். இந்தப் பந்தயத்தில்ரிலையன்ஸின் ஜியோ, ஏர்டெல் ஆகியவற்றுடன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பமும் உள்ளது. மூன்றுநிறுவனங்களுக்கும் பொதுவான அனுமதி தரப்பட்டிருந்தா லும், லைசென்ஸ் இன்னும் தரப்படவில்லை; நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு கூறுகிறது. இந்தப் பின்னணி யில்தான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வரிசையான பதிவுகள் மூலம் பெரும்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்: “இந்தியாவில் சுயநலமிக்க சில கார்ப்பரேட்டுகள் தமது ஏகபோகத்தை நிலைநிறுத்திக்கொள்ள ஸ்டார்லி ங்கைத் தடுக்கின்றனர். இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்.” இந்திய நிறுவனங்களை ஏகபோகங்கள் எனக் குற்றம்சாட்டும் மஸ்க், பலதுறைகளில் உலக அளவில் தானே ஏகபோகம் உருவாக்கியுள்ளதை மறைக்கப் பார்க்கிறார். அதே போல இந்திய மக்களுக்குஎதிரான குற்றம் என்று சொல்லித் தன்னை மீட்பர் போலக் காட்டிக்கொள்ள முயல்கிறார். இதே மஸ்க்கின் இணையவசதிதான் பாலஸ்தீன மக்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு உதவியது. பல ஏகாதிபத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கும் இது உதவுகிறது. ஆனால் இவர் இந்திய மக்கள் குறித்துக் கவலைப்படு வது, கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் மீது பாசம் காட்டுவது போன்றதே.

இந்திய அரசியலில் மூக்கை நுழைக்கும் மஸ்க்

அடுத்த பதிவில் மஸ்க் இவ்வாறு குற்றம்சாட்டுகிறார்: “ஸ்டார்லிங்க் 165 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது; இந்தியாவில் 5 ஆண்டுகளாக ஒவ்வொரு சட்டத்தையும் மதித்துச் செயல்பட்டுள்ளது, ஆனாலும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? அம்பானிதான் இந்தியாவின் உண்மையான (Boss) தலைவரா?” தனது ஸ்டார்லி ங்கிற்கு அனுமதி கிடைக்காததற்குக் காரணமாகஇந்தியாவின் ஏகபோக முதலாளியான அம்பானியை நேரடியாகக் குற்றம்சாட்டுவது மட்டுமல்ல, இந்தியாவின் உண்மையான பிரதமர் அம்பானியா எனக் கேட்பதன் மூலம் இந்தியஅரசியலிலும் மஸ்க் மூக்கை நுழைக்கிறார். தான் உலகின் முதல் பணக்காரன் என்ற காரணத்தால் இந்தியா போன்றநாட்டின் அரசிய லில் மூக்கை நுழைக்கலாம் என்பது மூர்க்கதனமான ஆணவம் மிக்க எண்ணமே தவிர வேறல்ல. ஆனால் இதற்கு இன்னும் “56 இன்ச் ஆதர வாளர்கள்” எவரும்வலுவான அரசியல் ரீதியான பதில் தரவில்லை என்பது அவர்களின் அமெரிக்க பயத்தையே காட்டுகிறது. இந்தப் பயம்தான்மஸ்க் போன்றவர்கள் தங்களின் அதிகாரம் உலகளாவியது என எண்ண வைக்கிறது.

மஸ்க்கின் முரண்பாடுகள்

எக்ஸ் தளம் மூலம் இந்திய மக்களின் ஆதரவையும், உலக சமூக ஊடக பயனர்களின் ஆதரவையும் பெற்று, இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதே இந்தப் பதிவுகளின் நோக்கம். மஸ்க்கின் இருமுரண்பாடுகள் இங்கு குறிப்பிடத்தக்கவை: ஒன்று, இந்திய அரசின் குடியுரிமைக் கொள்கைகளான சிஏஏ/என்ஆர்சி/என்பிஆர்ஆகியவற்றை வலுவாக ஆதரித்து, பாஜக அரசின் எதேச்சதி காரச் செயல்களுக்குத் தான் ஆதர வாக இருப்பதாகச் செய்திகொடுத்தார்; அப்படி இருந்தும் ஒன்றிய அரசின் கருணை போதுமான அளவு இவர் மீது விழவில்லை போலும். இரண்டாவதாக, எந்த இந்திய கார்ப்பரேட்டுகளை மஸ்க் இப்போது விமர்சிக்கிறாரோ, அதே ஜியோ மற்றும் ஏர்டெல்லுடனேயே தனது ஸ்டார்லிங்கைப் பரப்பக் கூட்டு நிறுவன ஒப்பந்தங்கள் போட்டி ருந்தார்; எனினும் அந்த ஒப்பந்தங் கள் நிறைவேறவில்லை.

ஈரானில் மஸ்க்கின் துரோகம்

சமீபத்தில் ஈரானுக்குள் அமெரிக்கா இணைய வசதி மூலம் சிலரைத் தூண்டிவிட்டு, மக்களை அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட வைத்தது; இதில் ஏராளமான அரசாங்க ஆதரவாளர்களும் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். ஈரான் இணையத்தை முடக்கிய பின்னரும் சிஐஏ, மொசாட் மூலம் பொய்த் தகவல்கள் பரவியது குழப்பமாக இருந்தது; பின்னர் ஸ்டார்லிங்க் மூலமே கலகக்காரர்களுக்குத் தகவல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு எதிராக ஸ்டார்லிங்க் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என ஈரான் கேட்டுக்கொண்ட பின்னரும், மஸ்க் அமெரிக்க அரசுக்கு ஆதரவாக அந்த வேண்டுகோளை நிராகரித்தார். ஈரானிடம் ஸ்டார்லிங்கை முடக்கும் தொழில்நு ட்பம் இல்லாததால், இன்னொரு தேசத்திடமிருந்து (சீனா அல்லது ரஷ்யா என கூறப்படுகிறது) அந்தத் தொழில்நுட்பத்தைப் பெற்றே ஸ்டார்லிங்கை முடக்கியது. ஒரு தேசத்தில் உள்நாட்டுக் கலகத்தை ஏற்படுத்த ஸ்டார்லிங்க் பயன்படும் எனும் அபாயம் பல நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோடி அரசாங்கம் ஈரான் பக்கம் வலுவாக நிற்கவில்லை என்றாலும், ஸ்டா ர்லிங்க் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனும் எச்சரிக்கையைப் புறந்தள்ள இயலாது; அனுமதி பிரச்சினையில் கூடுதல் எச்சரிக்கை தவறில்லை. ஆனால் அம்பானி, மிட்டலுக்குஆதரவாக இதை முகமூடியாகப் பயன்படுத்த இந்திய அரசு திட்டமிடுகிறதா என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய நிறுவனங்களும் இத்தகைய துரோகம் செய்யும் ஆபத்து உண்டு.

ஸ்டார்லிங்கின் அதீத விலை

தேசப் பாதுகாப்புப் பிரச்சினைக்கு அப்பால், ஸ்டார்லிங்க் தரும் இணைய வசதியின் விலையும் முக்கியப் பிரச்சினை. ஸ்டார்லிங்க் இணை யத்தின் மாதாந்தர விலை ரூ.2,500 முதல் 3,500 வரை; கருவிகளின் விலை ரூ.15,700 முதல்34,000 வரை. இந்திய நிறுவனங்கள் தரும் மாதாந்தர விலை ரூ.400 முதல் 1,000 வரை; இணைய கருவிகளை இலவசமாகத்தரவும் அவை தயார். ஸ்டார்லிங்கின் கூடுதல் விலை யைக் கிராமப்புறத்தில் உள்ள சாதாரணநுகர்வோர்கள் எப்படித் தர இயலும்? பிஎஸ்என்எல்தான் குறைந்த விலையில் இணைய வசதி தருகிறது என்பதை கீழ்க்கண்டவிவரம் தெளிவாக்கும்:(அட்டவணையில்)ஸ்டார்லிங்க் அதிக விலையை நிர்ணயித்தால் அதை எப்படி ஏற்க இயலும்? மக்கள் நலனைக் கருத்தில் கொண்டால், பாஜகஅரசு பிஎஸ்என்எல்லின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்; ஆனால் பிஎஸ்என்எல்லைச் சிதைப்பதே ஒன்றிய அரசின் குறிக்கோளாக உள்ளது.

இந்தியாவின் உண்மையான “பாஸ்” யார் எனும் மஸ்க்கின் கேள்விக்கான பதில் இந்திய மக்களு க்கு நன்றாகத் தெரியும்.பெரு முத லாளிகள்தான் இந்திய அரசை ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகள்; மோடி ஆட்சியில் சில முதலாளிகளுக்குக் கூடுதல் ஆதரவும் சலுகைகளும் தரப்படுவதும் மக்களுக்குத் தெரியும். இத்தகைய முதலாளிகள்மோடி அரசின் கூட்டுக் கொள்ளைக் கள வாணிகள். அதே சமயம் எலான் மஸ்க் போன்றவர்கள் இந்தக் கூட்டுக்களவாணிகளைவிடச் சிறந்தவர்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதை அறியாத சிலர் மஸ்க்கின் வாதத்தில்நியாயம் இருப்பதாகவும், வேறு சிலர் அம்பானி பக்கத்தில் நியாயம் இருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் வாதிடுகின்றனர்.அம்பானி, மிட்டல் போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்தான் இந்திய அரசை வழிநடத்துகிறது எனில், மஸ்க், ஜெஃப்பெசோஸ் போன்ற கார்ப்பரேட்டுகளின் நலன் அமெரிக்க அரசை வழிநடத்துகிறது. பெரு முதலாளிகள் இந்தியாவைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெளிநாட்டவர்களாக இருந்தாலும், அவர்களின் ஒரே நோக்கம் லாபக் கொள்ளை மட்டுமே!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.