கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
13 Feb 2026, 5:58 pm

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் விரட்டியடிப்பு

ஈரோடு, பிப்.13- தாளவாடி மலைப்பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த 3 யானைகளை சைரன் ஒலி எழுப்பி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி யடித்தனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் யானைகள், இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தும் நிகழ்வு அதிகரித்துள்ளது. வனத்துறை சார்பில் இரவு நேரத்தில் யானைகளை விரட்டும் குழு அமைக்கப்பட்டு, யானை வரும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வியா ழனன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அருளவாடி மற்றும் தமிழ்புரம் கிராமங்களில் நுழைந்த 3 யானைகளை வனத்துறையினர் சைரன் ஒலி எழுப்பிய விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வனத் துறையினருடன் இணைந்து விவசாயிகளும் யானை களை விரட்டியடித்தனர். சைரன் ஒலியை கேட்ட யானைகள் அஞ்சியபடி வனப்பகுதிக்குள் ஓடின. இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதால், பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அட்டைப்பெட்டி கிடங்கில் தீ விபத்து

கோபி, பிப்.13- கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் அட் டைப்பெட்டி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னகுளம் ஜே.எஸ்.நகர் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பழைய அட்டைப்பெட்டி கிடங்கு உள்ளது. இங்கு பழைய அட்டைகளை கூழாக்கி கோன் தயாரிப்பதாக கூறப் படுகிறது. இந்நிலையில், கிடங்கில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் புதனன்று உணவு அருந்தி கொண்டி ருந்தனர். அப்போது கிடங்கில் பழைய அட்டைகள் பண்டல்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதி யிலிருந்து புகை வெளியேறியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கிடங்கு உரிமை யாளருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தக வல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கிடங்கு முழுவதும் கட்டுகடங்காமால் எரிந்த தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்றுடன் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப் புத் துறையினர் போராடினர். தொடர்ந்து சத்தியமங்க லம், நம்பியூர், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதி யில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் சுமார் 700 டன் அட்டைகள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.

வனப்பகுதியில் அத்துமீறல்

தருமபுரி, பிப்.13- வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் முறை கேடாக பாதை அமைத்து லாரிகளை இயக்கியதோடு, மிரட்டல் விடுத்த கல்குவாரி நிர்வாகி மற்றும் பணியா ளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், இண்டூர் மற்றும் நாகா்கூடல் ஊராட்சி எல்லையில் உள்ள அவ்வை நகர் பகுதி யில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிர ஷர் செயல்பட்டு வருகிறது. லாரிகள் சென்றுவர வனத் துறைக்கு சொந்தமான இடத்தை குவாரி உரிமையா ளர்கள் ஆக்கிரமித்து சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு அழைப் பாணை அனுப்பினர். மேலும், அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர், லாரிகள் சென்றுவரும் பாதை யில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சாலையாக பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர். இருப்பினும், கிரஷர் உரிமையாளர்கள், அந்த பள் ளத்தை மூடிவிட்டு மீண்டும் சாலையாக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதி காரி வியாழனன்று நேரில் விசாரணை மேற்கொண்ட போது, குவாரி தரப்பினர் அவருக்கு மிரட்டல் விடுத் துள்ளனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்பேரில், தருமபுரி வனச்சரக அலுவலர் முரளி தலைமையில் வனத்துறை அலுவ லர்கள், வனத்துறை சிறப்பு பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மிரட்டல் விடுத்த குவாரி நிர்வாக மேலாளர் உள்ளிட்ட 4 பேரை வனத்துறை சிறப்பு பாதுகாப்பு படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

கடும் உறைபனியால் நீலகிரி மக்கள் பாதிப்பு

உதகை, பிப்.13- நீலகிரி மாவட்டத்தில் நிலவும் கடும் உறைபனி தாக்கத்தால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் தலைநக ரான உதகை, பிப்ரவரி மாதத்தின் இரண் டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், ‘குட்டி காஷ் மீர்’ போல் காட்சியளிக்கிறது. உதகை யில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள் ளது. அதே நேரத்தில் காந்தல், தலை குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயர மான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரங்க ளில் புல்வெளிகள், தேயிலைத் தோட் டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப் புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது. தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள், தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிக ளும் அதிகாலையில் நிலவும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந் தித்து வருகின்றனர். இவ்வாறு, பிப்ர வரி மாதம் தொடங்கிய பின்னும் குறை யாத உறைபனி தாக்கம் காரணமாக, உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரோஜா செடிகளை பாதுகாக்கும் ஊழியர்கள் கடந்த 10

நாட்களுக்கு மேலாக மீண்டும் உதகையில் உறைபனியின் தாக் கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனால், மலர் செடிகள், தேயிலைச் செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப் பாக, உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உதகை ரோஜா பூங்காவில் அலங்கார செடிகளை பனி தாக்காமல் இருக்க, செடிகளின் மீது தற்போது கோத்தகிரி மிலார் செடி களை கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூங்கா ஊழியர் கள் கூறுகையில், கோடை சீசனுக்கான பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. பூங்காவிலுள்ள அனைத்து அலங்கார செடிகளும் கவாத்து செய்யப் பட்டு, சீசனுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இந்த அலங்கார செடிகளை பனியில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

வனவிலங்கு தாக்கியதில் முதியவர் பலி? விசாரணை

கோவை, பிப்.13- ஆனைகட்டி அருகே பழங்குடியி னத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை வன விலங்கு தாக்கி இறந்த நிலையில் இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உன்ன கொண்டனூர் புதூர் பகு தியை சேர்ந்தவர் பழனிசாமி (68). பழங் குடியினர் இனத்தை சேர்ந்த இவர், ஆடு கள் வளர்ப்பை தொழிலாக செய்து வந் தார். இவர் அப்பகுதியில் உள்ள வன எல்லையோர பகுதிகளில் ஆடு மேய்ப் பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் வியாழனன்று வழக்கம் போல வன எல்லையோர பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும் பாததால், கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கோவை வனத்துறையினருக்கு தக வல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் அவரை தேடி சென்றனர். அப்போது காப்பு காட்டு எல் லையில் இருந்து சுமார் 200 மீட்டர் காப்புக்காட்டின் உள்ளே பழனிசாமி சட லமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றிய வனத் துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் உடற் கூராய்விற்காக அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் மற்றும் தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். இதுகுறித்து வனத்துறையினர் கூறு கையில், வனப்பகுதிக்குள் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது. திடீ ரென வந்த யானை தாக்கியதில் பழனி சாமி உயிரிழந்து இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் யானை தாக்கியதை யாரும் பார்க்க வில்லை. அதேபோல வேறு ஏதேனும் வனவிலங்கு தாக்கியதா அல்லது வன விலங்குகளை பார்த்து பயத்தில் ஓடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. எனவே அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவுகள் வரும்போது அவ ரது உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப் படும்’ என்றனர்.

பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிய அவகாசம் நீட்டிப்பு

தருமபுரி, பிப்.13- பெயரில்லாத பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்வதற்கான அவகாசம் செப்.26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு விதிகளின்படி பொதுவாகவே குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பெயருடன் பிறப்பை பதிவு செய்து, பிறப்பு சான்றிதழ் இலவசமாக பெற முடியும். ஒரு வேளை குழந்தையின் பெயரின்றி பிறப்புச்சான்று பெற்றிருந்தால், அடுத்த 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து, குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். ஓராண்டுக்கு மேலும் பெயர் பதிவு செய்யாதவர்கள் உரிய தாமத கட்டணம் செலுத்தி, 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றிதழ் பெறலாம். ஒருமுறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே, 01.01.2000க்கு முன்னர் பதிவுசெய்த பிறப்புகளுக்கும், அதற்கு பிறகு பதிவுசெய்த பிறப்பு பதிவுகளுக்கும் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்காக கால அவகாசம் வரும் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெயரை பதிவு செய்து பிறப்பு சான்று பெற ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலரையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு, சுகாதார ஆய்வாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று குறைதீர் கூட்டம்

ஈரோடு, பிப்.13- ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் சனியன்று (இன்று) நடைபெற உள்ளது. ஈரோடு - ராய பாளையம், பெருந்துறை - மைலாடி, மொடக்குறிச்சி - சோளி பாளையம், கொடுமுடி - சாணார்பாளையம், கோபி - நஞ்சை புளியம்பட்டி, நம்பியூர் - நிச்சாம்பாளையம், பவானி - அய்யாம் பாளையம், சத்தி - செல்லிபாளையம் மற்றும் தாளவாடி வட்டம் - ஒசூர் நியாய விலைக்கடைகளில் இம்முகாம்கள் நடை பெறவுள்ளது.

ட்ரோன்கள் பறக்க தடை

கோவை, பிப்.13- பிப்ரவரி 14 ஆம் தேதி யன்று கோவை குண்டு வெடிப்பு நாள் மற்றும் சிவ ராத்திரியை முன்னிட்டு முக் கிய பிரமுகர்கள் வருகை யால் கோவை சிங்காநல் லூர், சின்னியம்பாளை யம், நேரு நகர், ராமநாத புரம், பந்தய சாலை, வீர கேரளம், வடவள்ளி உள் ளிட்ட பகுதிகள் சிவப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் படி, வியாழனன்று நள்ளி ரவு முதல் பிப்.15 நள்ளிரவு வரை சுமார் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர்.

சாலை விரிவாக்கத்தில் தரமற்ற பணி ஆய்வுக் குழு அமைக்க கோரிக்கை

அவிநாசி, பிப்.13- அவிநாசி அருகே ஆட்டையம்பாளையம் முதல் அவிநாசி எல்லை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரி வாக்கப் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, மாவட்ட ஆட் சியர் உடனடியாக ஆய்வுக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வேலாயு தம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டையாம்பாளையம் பகுதி முதல், ராமநாதபுரம் ஊராட்சி, கோவை மாவட்ட எல்லை வரை சாலை விரிவாக்கப் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலை விரிவாக்கம் மட்டுமின்றி, சென்டர் மீடியன் அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் செம்பியநல்லூர் ஊராட்சி, மேட்டுப்பாளையம் சாலை, ஆஞ்ச நேயர் கோவில் எதிரே உள்ள இடத்தில் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாலையை சீரமைத்தனர். இந்த நிலையில், செம்பியநல்லூர் ஊராட் சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனத்தின் ஸ்டாண்டுகள் புதிய சாலையில் பதிந்து பள்ளம் விழும் அளவிற்கு தரமற்று காணப்படுகிறது. மேலும், ஆட்டையாம் பாளையம் ரவுண்டானா பகுதியில் முழுமையாக பணிகள் முடிக்கப்படாமலேயே வெறும் வண்ணம் மட்டும் அடிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் தரணிதரனின் கைப்பேசிக்கு அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக ஆய்வுக் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இளம்வயது திருமணம் தடுப்பு பேரணி

தருமபுரி, பிப்.13- தருமபுரியில் நடைபெற்ற இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணர்வு பேரணி வியாழ னன்று நடைபெற்றது. தருமபுரி பழைய பேருந்து நிலையத் திலிருந்து துவங்கிய இப்பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி சி.திருமகள் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள், இளம்வயது திருமணத்தால் ஏற்படும் சமூக பிரச்சனைகள், பெண்ணுக்கு உடல்ரீதியாகவும், உளவியலாகவும் ஏற்படும் இன்னல்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், இளம்வயது திருமணத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா, போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு, மக ளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி முகமது ரிஸ்வானுல்லா செரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெறிச்சோடிய நீர்வீழ்ச்சி

சேலம், பிப்.13- சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்aசியில் முட்டல் கிரா மம் கல்வராயன்மலை அடி வாரத்தில் அமைந்துள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சி மற் றும் முட்டல் ஏரி வனத்துறை யின் சூழல் சுற்றுலாத் திட்டத் தின் கீழ் செயல்பட்டு வருகி றது. முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக் கும் வசதி வனப்பகுதியில் பொழுதுபோக்கும் வகையில் குடில் பூங்கா மற்றும் சிறு வர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகை தந்து விடுமுறை நாட்களில் தனது குடும்பத்து டன் குளித்து மகிழ்ந்து வந்த னர். இந்நிலையில் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது காலை நேரங்க ளில் பனிப்பொழிவு, பகல் நேரங்களில் வெயிலின் தாக் கம் அதிகரிப்பால் ஆணை வாரி நீர்வீழ்ச்சியில் நீர்வ ரத்து குறைந்துள்ளது. இத னால் நீர்வீழ்ச்சி, படகு இல் லம், பூங்கா உள்ளிட்ட இடங் கள் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

குப்பை மேலாண்மைக்கு தரம் பிரிக்கும் எந்திரம் நிறுவும் பணி தீவிரம்

திருப்பூர், பிப்.13- திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் நிறு வும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரில் நாளொன்றுக்கு சரா சரியாக 573 டன் குப்பை உற்பத்தியாகிறது. இந்த குப்பையை தரம் பிரிக்காமல் அரு காமை பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் நிலையில் பாறைக்குழிகளில் குப்பை கொட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த மூன்று மாதங் களுக்கு முன்பு நகரில் உற்பத்தியாகும் குப்பையை கொட்டுவதற்கு இடம் இல்லா மல், ஆங்காங்கே மலை போல் குப்பை தேங்கியிருந்தது. குப்பை அகற்றுவதற்கு பாறைக் குழி களை நாடி செல்வதற்கு மாறாக குப்பை மேலாண்மைக்கு அறிவியல் பூர்வமான வழிமுறையை செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுகுறித்து வழக்கு நடைபெற்று வந்தது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலை யில் திருப்பூர் குப்பை பிரச்சனைக்கு நவீன முறையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு மாநக ராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மாநகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப் பட்டு இருந்த எம்.சி.சி. எனப்படும் குப்பையில் இருந்து நுண் உரமாக்கும் மையங்களை புதுப்பித்து, பழுதடைந்த இயந்திரங்களை மாற்றி அவற்றின் முழு கொள்ளளவில் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இந்த மையங்கள் முழுமை யாக செயல்படும் பொழுது ஏறத்தாழ 100 டன் குப்பையை நுண் உரமாக்க முடியும். இது தவிர இறைச்சிக் கழிவுகளை அப்பு றப்படுத்துவதற்கு விக்கி ட்ரேடர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப் படையில் கோழிக்கறி கழிவுகளை சேக ரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவ னம் பிடிகிரி எனப்படும் கால்நடை தீவனம் தயாரிக்க இறைச்சிக் கழிவுகளை சேகரிக்கி றது. கோயில்வழி மாநகராட்சி இடத்தில் டிராமில் எனப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகி றது. அதேபோன்ற எந்திரம் நெருப்பெரிச்சல் பகுதியில் நிறுவப்பட்டு வருகிறது. இதன் மூலம் குப்பை தரம் பிரித்து அவற்றை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படும். இது தவிர உலர்கழிவுகளை சேகரிப்பது என்ற பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நெருப்பெரிச்சல் அருகே கல் லாங்குத்து பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பூங்கா அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அங்கு குப்பை தரம் பிரிப்பது மட்டுமின்றி நுண் உரமாக் கல், உலர் கழிவுகள் சேகரித்தல் உள்ளிட்ட பன்முக குப்பை மேலாண்மை பணிகள் மேற் கொள்ளப்படும் என்று மாநகராட்சி நிர்வா கம் தெரிவித்துள்ளது. அதற்காக முழு வீச்சில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

விளையாட்டு மைதானத்திற்கு கட்டணம் விதிப்பு

வாலிபர் சங்கம் எதிர்ப்பு கோவை, பிப்.13- விளையாட்டுக்கு கட்டணம் நிர்ண யம் செய்யாதே – முத்தண்ணன் குளம் டர்ப் (Turf) மைதானத்தை பொது ஏலத் தில் விட்டு கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட் டத் தலைவர் ந.ராஜா, செயலாளர் மு. தினேஷ் ராஜா ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது, கோவை மாநகராட்சி சார்பில் முத்தண்ணன் குளம் அருகில் கிரிக் கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுக் கான நவீன டர்ப் மைதானம் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இம் மைதானங் களை பொது ஏலத்திற்கு விட மாநக ராட்சி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு கோவை நகர இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதகமானதாகும். கோவை மாவட்டம் முழுவதும் தனியார் நிர்வாகத்தில் நூற்றுக்கணக் கான டர்ப் மைதானங்கள் இயங்கி வரு கின்றன. அவற்றில் ஒரு மணி நேரத் திற்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. நகர விரி வாக்கம் மற்றும் மக்கள் தொகை அதிக ரிப்பு காரணமாக, மாநகராட்சி எல்லைக் குள் போதிய அளவு திறந்த விளை யாட்டு மைதானங்கள் இல்லை. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இலவச டர்ப் மைதானங்கள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அப்ப டிப்பட்ட சூழலில், மக்கள் நலன் கருதி அமைக்கப்பட்ட மைதானத்தை பொது ஏலத்தில் விடுவது ஏற்புடையதல்ல. தமிழக அரசு சமீப காலமாக விளை யாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி யின் இந்த நடவடிக்கை அதற்கு முர ணானதாகும். எனவே, முத்தண்ணன் குளக்கரையில் அமைந்துள்ள கிரிக் கெட் மற்றும் கால்பந்து டர்ப் மைதா னங்களை பொது ஏலத்திற்கு விடும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், கோவை மாநக ராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அரசு சார்பில் நவீன மற்றும் அனைவ ருக்கும் அணுகக்கூடிய விளையாட்டு மைதானங்களை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.