அணையை நீந்திக் கடந்த யானை கூட்டம்
1 Oct 2026, 11:51 pm
<p><strong>அணையை நீந்திக் கடந்த யானை கூட்டம்</strong></p><p>பொள்ளாச்சி, அக்.1-கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. தற்போது நிலவும் எல்நினோ தாக்கம் காரணமாக அப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றன.இந்நிலையில், பரம்பிக்குளம் அணைப் பகுதியில் தாயுடன் வந்த ஒரு குட்டி யானை உட்பட மூன்று யானைகள், அணையின் ஒருகரையிலிருந்து மற்றொரு கரைக்கு லாவகமாக நீந்திச் சென்றன. அணையின் ஆழமான பகுதியில் குட்டி யானை முழுமையாகத் தண்ணீரில் மூழ்கியபோதும், தாய் யானையின் தொடர் வழிகாட்டுதலைப் பின்பற்றி எவ்வித அச்சமுமின்றி நீந்தியது. தாயின் சொல் பேச்சு கேட்டு நேர்த்தியாக நீந்தி மறுகரையை அடைந்த அந்தச் சமத்துக் குட்டி யானையின் காட்சிகள், காண்போரை நெகிழ வைக்கும் வகையில் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.</p>
