சாலையில் யானைகள் நடமாட்டம்
4 Jun 2026, 10:51 pm
<p>உதகை, ஜூன் 4-</p><p>முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் குட்டியுடன் யானைகள் நீர் அருந்தியதை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.</p><p>நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதி முழுவதும் கடந்த 20 நாட்களாக பெய்து வரும் மழையால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் வறட்சி ஏற்பட்டபோது உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர்ந்த யானை கூட்டங்கள் தற்போது முதுமலையில் பசுமை திரும்பியதால் மீண்டும் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக யானைகள் முதுமலையில் உலா வரும் நிலையில், மசினகுடி - தெப்பக்காடு சாலையோரத்தில் உள்ள ஒரு பாறையில் தேங்கி இருந்த தண்ணீரை குட்டியுடன் யானை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீர் அருந்தின. சாலையோரத்தில் யானைகள் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து ரசித்தனர். தற்போது அதிகளவு யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
