தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்: மக்கள் அச்சம்

5 Apr 2026, 5:18 pm
கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்: மக்கள் அச்சம்
<p><strong>கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்: மக்கள் அச்சம்</strong></p> <p>ஈரோடு, ஏப்.5- ஜீர்கள்ளி வனப் பகுதியிலிருந்து வெளி யேறிய ஒற்றை யானை, ஆனந்தபுரம் கிராமத்திற்குள் நுழைந்ததால் அப் பகுதி மக்கள் அச்சம டைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலி கள் காப்பகத்தில் ஜீர் கள்ளி உட்பட 10 வனச் சரகங்கள் உள்ளன. &nbsp;இந்த வனச்சரகங்க ளில் யானை, புலி, சிறுத்தைப்புலி. மான், காட்டெருமை கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் காணப்படு கின்றன. இதில், அடிக்கடி தண்ணீர் மற்றும் தீவனம் &nbsp;தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் விவசாயிகளை யும் தாக்குகின்றன. இந்நிலையில், சனியன்று ஜீர் கள்ளி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை &nbsp;யானை அருகே உள்ள ஆனந்தபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. யானையை கண்ட கிராம மக்கள் அச்ச மடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். ஊருக்குள் அங்கும் இங்கும் சுற்றிய யானை, பின் னர் அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் சுற்றியது. இதற் கிடையே அங்கு வந்த வனத்துறையினர் விவசாயிக ளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை விரட்ட தொடங்கினர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகே யானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்க ளுக்கு காட்டு யானைகள் நுழையாத வகையில் வனத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். இதேபோன்று, நீலகிரி மாவட்டம், கூடலூரை சுற்றி யுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் கிராமப் பகுதி களில் உலா வரும் யானைகளால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். இந்நிலை யில், ஞாயிறன்று ஐயங்கொல்லி தட்டம் பாறை கிராமத் தில் நாய்கள் குரைத்ததை கண்டு மக்கள் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர். அப்போது ஒற்றை யானை மெதுவாக நடந்து வந்தது. இதன்பின் வீடுகளை தாண்டி தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது இத னால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.