முந்தய பக்கம்

தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானைகள்

25 Jan 2026, 6:29 pm
தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானைகள்
<p><strong>தென்னை மரங்களை சேதப்படுத்தும் யானைகள்</strong></p> <p>உடுமலை, ஜன.25- திருமூர்த்தி நகர் பகுதியில் தென்னை மரங்களை யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வரும் சம்ப வத்தால் அப்பகுதி விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டம், திருமூர்த்தி நகர் வருவாய் கிராமத் தில் திருமூர்த்தி அணை அருகே ரமேஷ் &nbsp;என்பவர், தன்னுடைய் தோட்டத்தில் தென்னை மரங்களை நடவு செய்துள் ளார். இந்நிலையில், வனப்பகுதியி லிருந்து வெளியேறிய யானைகள், நள் ளிரவில் தோட்டத்திற்குள் புகுந்து 100க் கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டன. மேலும், &nbsp;தோட்டத்தைச்சுற்றி பயிர்களின் பாது காப்புக்காக போடப்பட்டிருந்த சோலார் மின்சார வேலிகளையும் யானைகள் முற்றிலும் சேதப்படுத்திச் சென்றன. யானைகள் நுழைந்ததையறிந்த, அப் பகுதியில் வசிக்கும் விவசாய பண்ணை &nbsp;தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பினர். &nbsp;வனத்திலிருந்து வெளியேறும் யானை கள், தொடர்ந்து பயிர்களை சேதப்ப டுத்தி வருவதால் அப்பகுதி விவ சாயிகள் கவலையடைந்துள்ளனர். முறையான அகழி அமைக்காததால், இதுபோன்ற செயல்கள் தொடர்கின் றன. எனவே, மலை அடிவார கிராமங்க ளுக்கு யானைகள் நுழையாதபடி, அக ழிகள் அமைக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி &nbsp;விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram