முந்தய பக்கம்

வீட்டை சேதப்படுத்திய யானைகள்

21 Jun 2026, 2:25 am
வீட்டை சேதப்படுத்திய யானைகள்
<p><strong>வீட்டை சேதப்படுத்திய யானைகள்</strong></p><p>உதகை, ஜூன் 20- பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த யானைகள் சேதப்படுத்தியதில், வீடு சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி, சப்பந்தோடு பகுதியில் வியாழனன்று இரவு கூட்டமாக வந்த யானை கள் குடியிருப்புகளுக்குள் புகுந்தன. தொடர்ந்து, சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்த சாஜிதா என்பவரது வீட்டின் கதவை உடைத்து யானைகள், வீட்டிற்குள் நுழைய முயன்றன. வீட்டின் முன்பக்க கதவை முட்டித் தள்ளிய யானைகள், அங்கிருந்த பாத்திரங்கள் மற் றும் சாஜிதாவின் தாயார் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி ஆகியவற்றை தூக்கி வீசி சேதப்படுத்தின. யானைகள் வீட்டிற்குள் நுழைய முயன்ற சமயத்தில், உள்ளே இருந்த சாஜிதா எவ்வித காயமுமின்றி உயிர் தப்பி னார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram