முந்தய பக்கம்

3 ஆவது நாளாக விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்

19 May 2026, 1:11 am
3 ஆவது நாளாக விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்
<p><strong>3 ஆவது நாளாக விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள் </strong></p><p>திருப்பத்தூர், மே 18- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மூன்றாவது நாளாக விளைநிலங்களை சேதப்படுத்திய யானை கூட்டத்தை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்திமாகுலபல்லி கிராமத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகளுக்கு சொந்தமான 30 ஏக்கர் விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானை கள் கூட்டம் அங்கே பயிரிடப்பட்டு இருந்த தென்னை, பப்பாளி, மா மரக்கிளைகள், மக்க சோளம், தீவனம் ஆகிய பயிர்கள், தண்ணீர் பைப்புகள் மற்றும் முள்வெளிகளை சேதப்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மீண்டும் யானைகள் ஊருக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். யானைகள் கூட்டம் அருகில் உள்ள ஆம்பூர் துருகம் காப்பு காட்டில் தஞ்சம் அடைந்துள்ளது. மீண்டும் இரவு நேரத்தில் விவசாய நிலங்கள் நோக்கி வரக்கூடும். ஆகை யால் காப்பு காட்டு அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்க ளுக்கு இரவு நேரத்தில் விவசாயிகள் யாரும் செல்ல வேண்டும், யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வன சரக அலுவலர் பாபு தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram