முந்தய பக்கம்

அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்களை சேதப்படுத்திய யானைகள்

3 Nov 2026, 12:35 am
அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
<p><strong>அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்களை சேதப்படுத்திய யானைகள்</strong></p><p>உதகை, நவ.2-உதகை அருகே தலப்பதேரி மந்து பகுதியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை, அறுவடைக்கு தயாராக இருந்த கேரட் பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் சோலூர், கோக்கால், டன்சாண்டல் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொக்காபுரம் பகுதியிலிருந்து தண்ணீர், உணவு தேடி யானைகள் இப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், திங்களன்று அதிகாலை தலப்பதேரி மந்து பகுதியில் புகுந்த யானை, கேரட் பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து விவசாயிரியாஸ் என்பவர் கூறுகையில், வனவிலங்குகளின் நடமாட்டத்தால் விவசாயப் பயிர்கள் சேதமடைவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. யானைகள் மட்டுமின்றி புலி,சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லையும் அதிகரித்துள்ளதால், வனத்துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram