தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மனிதரைப் போல பேர் சொல்லி அழைக்கும் யானைகள்

30 May 2026, 10:46 pm
மனிதரைப் போல பேர் சொல்லி அழைக்கும் யானைகள்

மனிதரைப் போல பேர் சொல்லி அழைக்கும் யானைகள்

மனிதர்கள் அன்யோன்யமாகப் பெயர் சொல்லி அழைப்பது போல யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைத்துக்கொள்கின்றன.

பன்னாட்டுஆய்வாளர் குழுவினர் கென்யாவில் உள்ள இரண்டு சவானா யானைக் கூட்டங்களின் அழைப்புகளை செயற்கை நுண்ணறிவு வழிமுறையைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து ஆராய்ந்தனர்.

யானைகள் தங்கள் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு யானையையும் அழைக்க தனித்தனி பெயர்களை உருவாக்கி பயன்படுத்துகின்றன என்று இது பற்றிய இந்த புதிய ஆய்வு கூறுகிறது.

பெயர் சொல்லி அழைத்துக்கொள்ளும் யானைகள் டால்ஃபின்கள், கிளிகள் தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றவர் பயன்படுத்தும் ஒலிகளை மிமிக்ரி செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன என்பது ஆய்வாளர்களுக்கு முன்பே தெரியும்.

என்றாலும் மனிதரை தவிர யானைகள் மட்டுமே பெயர்களை பயன்படுத்தி தங்கள் கூட்டத்தில் மற்றவரை அழைத்துக்கொள்ளும் ஒரே விலங்கு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“யானைகள் தங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒவ்வொரு யானைக்கும் ஒரு குறிப்பிட்ட குரல் அழைப்பை பயன்படுத்துகின்றன.

ஒரு யானை மற்றவர்களை அழைக்கும் அழைப்புகளை புறக்கணித்து தங்களுக்குரிய அழைப்பை மட்டுமே அங்கீகரித்து அதற்குப் பதிலளிக்கின்றன.

கேட்பதன் மூலம் மட்டும் யானைகள் அவற்றின் கூட்டத்தில் இருக்கும் மற்றவர்களால் விடுக்கப்படும் அழைப்பு தங்களை நோக்கியா என்பதை தீர்மானிக்கின்றன.

அந்த அழைப்பு விடுக்கப்படும் அசல் சூழலுக்கு அப்பால் இருந்தாலும் யானைகள் அதை புரிந்துகொள்கின்றன” என்று யு எஸ் கொலராடோ ஸ்டேட் பல்கலைக்கழக விலங்கு நடத்தை உயிரியலாளரும் ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான மைக்கேல் பார்டோ (Michael Pardo) கூறுகிறார். ஆய்வாளர்கள் கென்யா சாம்புரு தேசியப் பூங்கா (Samburu national reserve) மற்றும் அம்போஸ்லி தேசிய பூங்காவில் (Amboseli national park) 1986-2022 காலத்தில் யானைகளின் உறுமல் போன்ற ஒலிகளை சல்லடை போட்டு பதிவு செய்தனர்.

இயந்திரக் கற்றல் வழிமுறையை பயன்படுத்தி தனித்துவம்மிக்க 469 அழைப்புகளை அடையாளம் கண்டனர்.

இதில் 101 யானைகள் மற்றவற்றை கூப்பிடுவதற்காக விடுத்த அழைப்புகளும் 117 யானைகளால் அந்த அழைப்புகள் பெறப்பட்டதற்கான பதிவுகளும் இருந்தன.

யானைகள் உரத்த சத்தத்துடன் எழுப்பப்படும் பிளிறல் முதல் மனித காதுகளுக்குக் கேட்காத மெல்லிய உறுமல் ஒலிகள் வரை பலவிதமான சத்தங்களை எழுப்புகின்றன. அழைப்பு குரல்களில் எப்போதும் பெயர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால் பெரும்பாலும் நீண்ட தூரங்களில் இருக்கும்போதும், வளர்ச்சி அடைந்தவை இளம் யானைகளை அழைக்கும்போதும் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. உற்சாகத்துடன் பதிலளிக்கும் யானைகள் இளம் யானைகள் இத்திறனை கற்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால் வளர்ச்சி அடைந்த யானைகளே பெயர்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.

பெரும்பாலான அழைப்புகள் இசைச் செழுமையுடைய, குறைந்த அதிர்வெண் ஒலிகளே. இந்த ஆய்வுக்கட்டுரை “நேச்சர் சூழலியல் & பரிணாமம் (Nature Ecology & Evolution) என்ற இதழில் வெளிவந்துள்ளது. நண்பர் அல்லது குடும்பத்தைச் சேர்ந்தவர் கூப்பிட்ட பெயரின் பதிவை ஆய்வாளர்கள் ஒரு யானைக்கு போட்டுக்காட்டியபோது அது நேர்மறையாகவும் உற்சாகத்துடனும் பதில் வினை புரிந்தது.

ஆனால் மற்றவர்களின் அழைப்பை கேட்கச் செய்தபோது அதே யானை உற்சாகமில்லாமல் பதில் வினை புரிந்தது.

குறும்புத்தனம் மிக்க கிளிகளையும் டால்ஃபின்களையும் போல இல்லாமல், யானைகள் அழைப்பவர் எழுப்பும் ஓசையை அப்படியே மிமிக்ரி செய்வதில்லை.

கூட்டத்தில் இருந்து தொலைவிற்கு போய்விட்ட யானையை கூப்பிட, நன்கு பழக்கமான யானைகளை அழைக்க, குட்டிகளுடன் அன்பு காட்ட போன்ற மூன்று சந்தர்ப்பங்களில் யானைகள் மெல்லிய ஒலிகளை எழுப்புகின்றன.

பெண் மற்றும் குட்டி யானைகளை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

ஒலியை எழுப்பும்போதும் அது கேட்கப்படும்போதும் யானைகளின் காதுகளில் ஏற்படும் சிறிய அசைவுகள் ஆராயப்பட்டன. “

இது வரை அறியப்பட்டதில் யானைகள் மற்றும் மனிதர்கள் மட்டுமே அழைப்பவர் ஏற்படுத்தும் ஒலியை அப்படியே திரும்பச் சொல்லாமல் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ள தன்னிச்சையாக பெயர்களை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவையாக உள்ளன.

யானைகள் குறிப்பிட்ட இலட்சியம் என்று எதுவும் இல்லாமல் பொதுவாகச் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது” என்று மூத்த ஆய்வாளர் ஜார்ஜ் விட்டமியா (George Wittemyer) கூறுகிறார்.

யானைகளின் மூதாதையர்கள் முதன்மைப் பாலூட்டிகளிடம் இருந்து தோன்றியவை மற்றும் கடல் வாழ் பாலூட்டிகளிடம் இருந்து 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பரிணாம மாற்றம் அடைந்து உருவானவை என்பதால் பெயர்களை சொல்லி அழைக்கும் அவற்றின் இந்தத் திறனின் பரிணாமம் பற்றி மேலும் ஆழமாக ஆராயப்படவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. என்றாலும் உயர் வளர்ச்சி மூளையைப் பெற்றிருப்பதால் செழுமையான சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட விரிவான குடும்ப உறவுகள் போன்ற பல பண்புகளில் இரண்டு உயிரினங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன” என்று யானைகளை பாதுகாப்போம் (Save the Elephants) அமைப்பின் தலைமைச் செயல் அலுவலர் ஃப்ராங் போப் (Frank Pope) கூறுகிறார்

. பெயர் சொல்லி அழைக்கும் இந்தத் திறன் யானைகளின் பல அதிசயிக்கத்தக்க எதிர்கால கண்டுபிடிப்புகளின் ஒரு சிறிய வெளிப்பாடு மட்டுமே.

காடுகளின் உயிர்ப் பன்முகத்தன்மையை காப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் இந்த அற்புத உயிரினங்கள் பற்றி வருங்காலத்தில் இன்னும் பல புரட்சிகரமான தகவல்கள் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.