முந்தய பக்கம்

சாலையில் நின்ற யானையால் பரபரப்பு

11 Jan 2026, 5:58 pm
சாலையில் நின்ற யானையால் பரபரப்பு
<p><strong>சாலையில் நின்ற யானையால் பரபரப்பு</strong></p> <p>உதகை, ஜன.11- உதகையிலிருந்து கல்லட்டி வழியாக மசினகுடி செல்லும் மலைப்பாதையில் ஒரு &nbsp;மணி நேரம் சாலையில் நின்ற யானையால் &nbsp;பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து கல் லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி மற் றும் மைசூரு-க்கு தேசிய நெடுஞ்சாலை செல் கிறது. இந்நிலையில், சீகூர் பாலம் அருகே &nbsp;சுமார் 40 வயது மதிக்க ஆண் யானை ஒன்று &nbsp;சாலை நடுவில் நின்றபடி ஒரு மணி நேரத்திற்கு &nbsp;மேலாக, சாலையோரத்தில் இருந்த மரத்தின் செடிகளை உடைத்து சாப்பிட்டவாறு நின் றது. இதனால் இருபுறமும் பல வாகனங் கள் அணிவகுத்து நின்ற நிலையில், சிறிது &nbsp;நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென் றது. இதையடுத்து அனைத்து வாகனங்க ளும் புறப்பட்டு சென்றன. இச்சம்பவத்தால் கல்லட்டி மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram