முந்தய பக்கம்

பயங்கர மோதலில் யானை உயிரிழப்பு

17 Feb 2026, 3:36 pm
பயங்கர மோதலில் யானை உயிரிழப்பு
<p><strong>பயங்கர மோதலில் யானை உயிரிழப்பு</strong></p> <p>மேட்டுப்பாளையம், பிப்.17- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலைக்காட்டு பகுதி யான கீழ்பில்லூர் என்னுமிடத்தில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் தந்தம் உடைந்து பலத்த காயம டைந்த ஒரு ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந் துள்ளது. தமிழக-கேரள எல்லையில் வனம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையை சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. யானைகள் நடமாட் டம் அதிகமுள்ள கீழ்பில்லூர் அருகே உள்ள வனப்பகுதி யில் திங்களன்று இரவு காட்டு யானைகள் பயங்கரமாக பிளிறியபடி இருந்ததை அங்குள்ள பழங்குடியின மக்கள் கேட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை சுண்டப் பட்டி பிரிவு கீழ்பில்லூர் மலைக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மொடசக்கை ஓடை அருகே ஆண் யானை யொன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடைப்பதை கண்ட உள்ளூர் மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில் இரு பெரிய ஆண் யானை களுக்கிடையே நடந்த மோதலில் இந்த யானையின் ஒரு &nbsp;தந்தம் உடைந்து கழுத்து உள்ளிட்ட இடங்களில் மற்றோரு &nbsp;யானையின் தந்தங்களால் குத்துப்பட்டு பலத்த காயம டைந்த காரணத்தினால் இறந்துள்ளதை கண்டறிந்தனர். இது &nbsp;குறித்து தங்களது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் துள்ள வனத்துறையினர், இறந்த யானையின் உடலை முழு மையான உடற்கூறு ஆய்வு நடத்த ஏற்பாடு செய்து வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறுகை யில், கடந்த 10 நாட்களாக ஒற்றை யானை இப்பகுதியில் சுற்றி &nbsp;வந்ததாகவும், திங்களன்று இரவு யானைகள் பிளிறும் சத்தம் தொடர்ந்து கேட்டதாகவும் தெரிவித்தனர். பில்லூர் அணைப் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக வரும் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட இடப் போட்டி காரணமாக இந்த மோதல் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram