முந்தய பக்கம்

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

6 Mar 2026, 3:17 pm
மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு
<p><strong>மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 6- கடம்பூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதி, காடகநல்லியை சேர்ந்தவர் புட்டப்பன். இவர் தனது தோட் டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். காட்டுப் பன்றிகள், யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால், வன விலங்குகள் தோட்டத்துக்குள் நுழையாதபடி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 30 வயதுள்ள ஆண் யானை, புட்டப்பனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிரை சாப் பிட வந்தபோது, மின்வேலியில் சிக்கி வியாழனன்று உயிரி ழந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் வனத்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சியதால், யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக புட்டப்பனிடம் வனத்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram