தொடரும் வனவிலங்குகளின் தாக்குதல் கடையால் மலைக்கிராமப்பகுதியில் யானை தாக்கி கூலித்தொழிலாளி பலி மக்களைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க பேரூராட்சித் தலைவர் கோரிக்கை
3 Jun 2026, 10:16 pm

தொடரும் வனவிலங்குகளின் தாக்குதல் கடையால் மலைக்கிராமப்பகுதியில் யானை தாக்கி கூலித்தொழிலாளி பலி மக்களைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க பேரூராட்சித் தலைவர் கோரிக்கை

அருமனை, ஜூன் 3- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகளின் அட்டூழியம் தொடர்கதையாகி வரு கிறது. காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து தாக்கியதில் கூலித்தொழி லாளி ஒருவர் பலியானார். கன்னியாகுமரி மாவட்டம் கடை யால் பேரூராட்சியில் மலையோர கிராமப் பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதியில் வனவிலங்குகளின் தாக்குதல் தினந்தோறும் நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமையன்று காலை 3 யானைகள் கிராமப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்தன. யானைகளை விரட்ட பொதுமக்கள் பல்வேறு வழி களில் முயன்றும் யானைகள் காட்டுக் குள் செல்லவில்லை. இதைத்தொ டர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடையால் பேரூ ராட்சி தலைவர் ஜூலியட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொ டுக்கப்பட்டு அதிகளவில் வன காவ லர்களை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மூன்று யானைகளும் மூன்று திசை களில் பிரிந்து சென்றன. இதனால் யானைகள் எந்த எல்லையில் நிற்கிறது என்பது தெரியவில்லை. மாலையில் ஒரு யானை பேணு வட்ட பாறை பகுதிக்குள் புகுந்து சுற்றியது. வட்டப்பாறை வெள்ள றக்கு பகுதியை சேர்ந்த கூலித்தொ ழிலாளியான ராஜேஷ் என்பவரை துரத்திச்சென்று தந்தத்தால் குத்தி வீசியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஷை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இறந்த ராஜேஷுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். பேரூராட்சித் தலைவர் கோரிக்கை கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் கூறுகை யில், வனவிலங் குகளின் தொடர் அட்டூழியத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. தற்போ துள்ள நடவ டிக்கை போதுமா னதாக இல்லை. இப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் ,தோட்டத் தொழி லாளர்களின் உயிருக்கும் உடைமைக் கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உரு வாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வா கம் அதிக கவனம் செலுத்தி மலையோர கிராம மக்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் கிராமங்களுக்குள் வராமல் தடுக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எம்எல்ஏ இரங்கல் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பி னர் பிரவீன் அப்பகுதிக்கு சென்று ராஜேஷின் மரணத்திற்கு இரங்கலை தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறு தலை கூறினார். உடற்கூராய்வுக்கு பிறகு ராஜேஷின் உடல் புதனன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இறுதிச்சடங்கிற்கான நிதி யுதவியை எம்எல்ஏ,பேரூராட்சி தலை வர், அதிகாரிகள் ஆகியோர் ராஜேஷ் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ ஆறுதல்

ராஜேஷின் உடலுக்கு பத்ம நாபபுரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.செல்ல சுவாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார். பொதுமக்களும், தோட்டத் தொழிலாளர்களும் அச்ச மின்றி வாழவும் வேலை பார்க்க வும் உரிய சூழலை வனத்துறையி னர் ஏற்படுத்த வேண்டும். வனத்தி லேயே உணவும் தண்ணீரும் கிடைப்பதை உறுதி செய்து ஆபத் தான வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.