யானை தாக்கி தொழிலாளி பலி: நிவாரணம் வழங்கல்
5 Jun 2026, 10:25 pm
<p>கோபி, ஜூன் 5- </p><p>கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த கட்டிடத் தொழிலாளி-யின் குடும் பத்தினரிடம் நிவாரணத் தொகை வழங்கப் பட்டது. </p><p>ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் காந்தி நகரை சேர்ந்தவர் பசுவராஜ் (40). கட்டிடத் தொழிலாளி-யான இவர், கடம்பூரில் வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 12 மைல் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த யானை திடீரென இருசக்கர வாகனத்தில் சென்ற பசுவராஜை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த பசுவராஜ் சம்பவயி டத்திலேயே உயிரிழந்தார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அங்கு நின்றிருந்த யானையை விரட்டினர். யானை காட்டுக்குள் சென்ற பிறகு பசுவராஜ் உடலை மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பசுவராஜுக்கு மனைவி, மகன், மகள் உள்ள னர். இதைத்தொடர்ந்து, அவரது உடலுக்கு பாவனிசாகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. தமிழ்செல்வி மரியாதை செலுத்தி, குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் நிவாரணத் தொகையான ரூ.10 லட்சத்தில், முதல் தவனையாக ரூ.50 ஆயிரத்தை குடும்பதினரிடம் வழங்கினார். </p>
