தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” யானை உயிரிழப்பு

27 Nov 2025, 3:11 pm
பிடிக்கப்பட்ட “ரோலக்ஸ்” யானை உயிரிழப்பு
<p>கோவை, நவ.27- ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் &ldquo;ரோலக்ஸ்&rdquo; யானை உயிரிழந்தது தொடர்பாக தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்க ளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்ப டுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்தனர். இதைய டுத்து தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த ஆக.17 ஆம் தேதியன்று ரோலக்ஸ் யானையை வனத்துறையி னர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை டாப்ஸ்லிப் வரகழி யாறு யானைகள் முகாமில் வைத்து &nbsp;கண்காணித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த நவ.12 ஆம் தேதியன்று ஆனை மலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மந் திரிமட்டம் வனப்பகுதியில் யானையை &nbsp;வனத்துறையினர் விடுவித்தனர். மேலும், யானையின் நடமாட்டத்தை கண்கா ணிக்க ரேடியோ காலரும் பொருத்தப் பட்டது. தொடர்ந்து யானையை வனத் துறையினர் கண்காணித்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வந்த னர். இந்நிலையில் புதனன்று மதியம் மந்திரிமட்டம் வனப்பகுதியில் உள்ள சிறுபுலிகன் குட்டையில் நீர் அருந்த சென்ற ரோலக்ஸ் யானை வழுக்கி விழுந்து உயிரிழந்தது. &nbsp;இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன் கூறுகையில், கோவையில் பிடிக்கப் பட்ட ரோலக்ஸ் காட்டு யானை நல்ல &nbsp;முறையில் மந்திரி வட்டம் வனப்பகுதி யில் விடப்பட்டது. தொடர்ந்து வனத் துறை ஊழியர்கள் யானையின் நட மாட்டத்தை கண்காணித்து வந்தனர். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சிக்னல் வரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தினமும் 48 முறை சிக்னல்கள் பெறப்பட்டது. அதேபோல் ரோலக்ஸ் யானை இரண்டு கிலோ மீட் டர் சுற்றுவட்டார பகுதிகளிலேயே இருந் தது. மேலும் யானை விடப்பட்ட பகுதி யில் ஆரோக்கியமான உணவுகள், போதிய நீர் வசதி இருந்தது. மேலும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வரும் சூழல் உள்ளது. இந்நிலையில் தான் யானை வழுக்கி விழுந்து உயிரிழந்துள் ளது. மேலும் ரோலக்ஸ் யானை உயிரி ழப்பு தொடர்பாக தலைமை வன உயி ரின காப்பாளர் உத்தரவின் பேரில் &nbsp;வேணு பிரசாத் ஐ.எஃப்.எஸ்., &nbsp;கால்நடை &nbsp;மருத்துவர் ஸ்ரீதர் அடங்கிய உண்மை &nbsp;கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள் ளது. யானையின் உயிரிழப்பு தொடர் பாக நேரில் வந்து கள ஆய்வு மேற் கொள்ள உள்ளனர். அப்போது ஜிபிஎஸ் சிக்னல்கள், ரேடியோ காலர் டேட்டா &nbsp;மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை, யானையை கண்காணித்து வந்த வனத்துறை ஊழியர்கள் ஆகி யோரிடம் விசாரிக்க உள்ளனர், என் றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.